வெள்ளரிக்காய் மிகவும் முக்கியமான சத்துக்களை கொண்டது. குறிப்பாக தண்ணீர் சத்து அதிகம். இதில் நார்சத்து, மினரஸ், ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. மதியம் சாப்பிடுவதற்கு முன்பாக வெள்ளரிக்காய் சாப்பிட்டால், இது நல்ல பசியை தூண்டும்.
100 கிராம் வெள்ளரிக்காயில் உள்ள சத்துக்கள்
15 கலோரிகள், புரத சத்து : 0.7 கிராம், நார்சத்து: 0.5 கிராம், சோடியம் – 2 மில்லிகிராம், பொட்டாஷியம், கால்சியம், இரும்பு சத்து உள்ளது.
வெள்ளரிக்காயில் 95 % தண்ணீரால் ஆனது என்பதால், இது உடலுக்கு தேவையான நீர் சத்தை கொடுக்கும் மேலும் வரட்சியிலிருந்து பாதுகாக்கும். குறிப்பாக வெயில் காலங்களில் இதை நாம் அதிகமாகவே சாப்பிடலாம்.
இதில் இருக்கும் நார்சத்து இதய நோய் வராமல் தடுக்கும் மேலும், கொலஸ்ட்ராலை குறைக்கும்.
உடலில் உள்ள எலக்ட்ரோலைட் அளவை சீராக்குகிறது. இதனால் ரத்த அழுத்தத்தை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும்.
மேலும் இதில் மிகவும் குறைவான கலோரிகள் உள்ளதால், உடல் எடையை குறைக்க இது பயன்படும்.
சர்க்கரை நோயாளிகள் வெள்ளரிக்காய்யை சாப்பிடலாம். குறிப்பாக சாலடில் சேர்த்து சாப்பிடலாம். மேலும் சர்க்கரை நோயாளிகள் வெள்ளரிக்காய்யை தோலுடன் சாப்பிட வேண்டும். அப்போதுதான் அதன் நார்சத்து உடலில் சேரும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“