scorecardresearch

ஓலா நிறுவனத்துடன் ஒப்பந்தம்: 3,11 பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு

தமிழ்நாடு அரசுக்கும்,, ஓலா நிறுவனத்திற்கும் இடையே நான்கு சக்கர மின்சார வாகனங்கள், உற்பத்தி மற்றும் 20 மெகாவாட் மின்கலன்கள் உற்பத்தி திறன் கொண்ட ஆலைகளை அமைப்பதற்குமான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

ஓலா நிறுவனத்துடன் ஒப்பந்தம்: 3,11 பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு

தமிழக அரசுக்கும், ஓலா எலக்ட்ரிக் மொமைலிட்டி பிரைவேட் லிமிடெட்  நிறுவனத்திற்கு இடையே 7,614 கோடி ரூபாய் முதலீடு குறித்தான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுக்கும்,, ஓலா நிறுவனத்திற்கும் இடையே நான்கு சக்கர மின்சார வாகனங்கள்,  உற்பத்தி மற்றும் 20 மெகாவாட் மின்கலன்கள் உற்பத்தி திறன் கொண்ட ஆலைகளை அமைப்பதற்குமான புரிந்துணர்வு  ஒப்பந்தம் முதலமைச்சர் ஸ்டாலின்  முன்னிலையில் கையெழுத்தானது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள சிப்காட் பூங்காவில் ரூ.7,614 கோடி  முதலீட்டில் இந்த ஆலைகளை ஓலா நிறுவனம் அமைக்க உள்ளது. இதன் மூலம் 3,111 நபர்களுக்கு வேலை  வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து ஓசூர் சிப்காட் தொழிற்பூங்காவில் ஐநாக்ஸ் ஏர் புராடக்ட்ஸ் நிறுவனம் அதி உயர் தூய்மையான திரவ மருத்துவ ஆக்ஸிஜன்      உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.கஸ்டாலின் திறந்துவைத்தார். தொடர்ந்து சென்னையில் நிறுவப்பட்டுள்ள ஜி.எக்ஸ். குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஆகியவற்றை சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலமாக திறந்துவைத்தார்.   

Stay updated with the latest news headlines and all the latest Uncategorized news download Indian Express Tamil App.

Web Title: Ola to invest rs 7614 crore in tamil nadu