முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழும் வீட்டின் முன்னாள் உரிமையாளர், மீண்டும் ஸ்டாலினை சந்தித்து அவரது வீட்டை பார்வையிட்டுள்ளார். இந்த வீடியோவை முதல்வர் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சரோஜா சீத்தாராமன் என்பவரது தாத்தா கோபாலபுரத்தில் உள்ள வீட்டை விற்பதாக தீர்மானித்துள்ளார். மறைந்த கருணாநிதிதான் அந்த வீட்டை அப்போது வாங்கியுள்ளார். 1955ம் ஆண்டு வீடு விற்கப்படும்போது சரோஜா சீத்தாராமன் திருமணம் தீர்மானிக்கப்படுகிறது. இதற்காக கூடுதலாக 2 மாதங்கள் கால அவகாசம் கலைஞரிடன் கேட்டுள்ளனர். இதற்கு ஒப்புக்கொண்ட கருணாநிதி , அத்திருணத்திற்கு சிறப்பு விருந்தனராக பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் சமூகவலையதளம் மூலம் முதல்வர் சரோஜா சீத்தாராமனை தெரிந்திகொண்டிருக்கிறார். 86 வயதாக சரோஜா சீத்தாராமன் தற்போது மீண்டும் அவர்கள் வாழ்ந்த வீட்டை குடும்பத்துடன் பார்வையிட்டுள்ளார்.
இந்நிலையில் முதல்வரின் குடும்பத்தினர் தங்களை நன்றாக கவனித்துக்கொண்டதாகவும். காப்பி, வடை போன்று எல்லாவற்றையும் கொடுத்து உபசரித்தனர் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் சரோஜா சீத்தாராமன் மற்றும் அவரது குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வீட்டை முழுவதுமாக சுற்றி காட்டியுள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக அவர் முகநூலில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்