ஒரு லட்சம் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தால், எல்லா மாதமும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருவேன் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தேர்தல் பரப்புரையுல் கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் வருகின்ற 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை சந்திக்கின்றன. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பரப்புரை சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சார்பாக தேர்தல் பர்பபுரையில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது: “ஆடியோ, வீடியோவை வைத்து ஓட்டிக்கொண்டிருக்கும் பாஜக ஒரு கட்சியா?. ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்துவிட்டால். ஒவ்வொரு மாதமும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வந்து செல்வேன். இன்னும் 5 மாதங்களில் மகளிருகும் வழங்கும் ரூ.1000 வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
அதிமுக பாஜகவிற்கு அடிமையாக உள்ளது. பாஜக ஆளுநரை உருவாக்க பயிற்சிகள் நடத்துகிறார். விரைவில் ஓ. பன்னீர் செலவம் ஆளுநர் ஆவார். அதற்கு எனது வாழ்த்துக்கள்.” என்று அவர் கூறியுள்ளார்