எக்ஸ்பிரஸ் அட்டா: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேர்காணல்
தொடர்ந்து 3 ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதாரத்தை 7 சதவீத வளர்ச்சி விகிதத்திற்கு வழிநடத்துவதில் முக்கிய பங்காற்றி வரும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் பிரத்யேக நேர்காணல்.
Nirmala Sitharaman: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆளும் பா.ஜ.க-வின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் செயலாற்றி வருகிறார். இந்தியாவின் முதல் முழுநேர மற்றும் நீண்ட காலம் பணியாற்றிய பெண் நிதியமைச்சர் என்ற வகையில், 2024-25 ஆம் ஆண்டிற்கான சமீபத்திய இடைக்கால பட்ஜெட் உட்பட, நிதி ரீதியாக விவேகமான பட்ஜெட் விளக்க உரைக்களுக்காக அவர் பாராட்டப்பட்டார்.
மதுரையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த அவர் தற்போது நாட்டின் மிக முக்கிய தலைமைப் பொறுப்பில் பணியாற்றி வருகிறார். மேலும், இந்தியாவின் பொருளாதாரப் பாதையை வடிவமைப்பதில் அவரது உறுதியையும் நிபுணத்துவத்தையும் வழங்கி வருகிறார்.
எக்ஸ்பிரஸ் அட்டா-வின் இன்றைய நேர்காணலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அனந்த் கோயங்கா மற்றும் பி வைத்தியநாதன் ஐயர் ஆகியோருடன் உரையாடி, நாட்டின் பொருளாதார மாற்றத்தின் மையத்தில் உள்ள முக்கியப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க உள்ளார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தால் நடத்தப்படும் தி எக்ஸ்பிரஸ் அட்டா, எஸ் ஜெய்சங்கர், நிதின் கட்கரி, சித்தார்த்தா முகர்ஜி மற்றும் கரண் ஜோஹர் போன்ற குறிப்பிடத்தக்க நபர்கள் உட்பட, மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகளுடன் உரையாடல்களில் ஈடுபடுவதற்கான தளமாக உள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமாவின் பொருளாதாரப் பார்வை மற்றும் தலைமைத்துவ நுண்ணறிவுகளை நாங்கள் ஆராய எங்களுடன் இணையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.