Ramnath Goenka Excellence In Journalism Awards 2024 | Union Minister Nitin Gadkari: ராம்நாத் கோயங்கா சிறந்த பத்திரிகைளர் விருதுகள் (ஆர்.என்.ஜி விருதுகள்) வழங்கும் விழா இன்று மாலை 6 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பாகிறது.
ராம்நாத் கோயங்கா, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக் குழுமத்தின் நிறுவனத் தலைவர் ஆவார். இந்த நிறுவனத்தை 1932ல் நிறுவினார். அவரது நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் ராம்நாத் கோயங்கா சிறந்த பத்திரிகையாளர் விருதை நிறுவியது. இந்த விருதுகள் பத்திரிகைத் துறையில் சிறந்து விளங்கும் பத்திரிகையாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. அவர்களின் தைரியம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை அங்கீகரித்து, அவர்களின் சிறந்த பங்களிப்புகளை வெளியுலகிற்கு கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்திய மீடியா காலண்டரில் மிகவும் மதிப்புமிக்க நிகழ்வாக பார்க்கப்படும் இந்த நிகழ்வில், அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொண்ட போதிலும், தங்கள் தரத்தை மிக உயர்ந்த அளவில் பராமரித்த அச்சு/டிஜிட்டல் மற்றும் பிராட்காஸ்ட் பத்திரிகையாளர்களுக்கு விருது வழங்கி மகிழ்கிறது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.