செக்கச்சிவந்த வானம் : மணிரத்தினம் இயக்கத்தில், நான்கு கதாநாயகர்களை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும் படம் தான் செக்கச்சிவந்த வானம். மெட்ராஸ் டாக்கீஸ் வழங்கும் இந்த படத்தின் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களையும் தொடர்ந்து மெட்ராஸ் டாக்கீஸ் ட்விட்டர் தளம் ஒவ்வொரு நாளாக வெளியிட்டு வந்தது.
Advertisment
கதாநாயகர்களாக அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதீ ராவ், மற்றும் டயைனா ஏரப்பா ஆகியோரும் நடித்துள்ளனர்.
மேலும் மிக முக்கியமான கதாப்பாத்திரங்களில் ப்ரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் பெயருடன் வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் அனைவரிடமும் நல்ல வரவேற்பினைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் ட்ரைலரை இன்று காலை 10 மணி அளவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்டார். செக்கச் சிவந்த வானம் படம் தெலுங்கு மொழியிலும் `நவாப்’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. நவாப் படத்தின் ட்ரெய்லரை நாகார்ஜூன் வெளியிட்டார். செப்டம்பர் 28-ம் தேதி திரைக்கு வருகிறது இப்படம்.
Advertisment
Advertisements
இப்படத்தின் பாடல்களுக்கு வரிகள் கொடுத்துள்ளார் வைரமுத்து, ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன். இசை ஏ.ஆர். ரஹ்மான்.