உலகப் போர்கள், சுதந்திரம், கொரோனா கடந்து 137 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் சென்னை பேக்கரி குறித்த செய்தித் தொகுப்பு இதோ!
சென்னையில் ஸ்மித் ஃபீல்டு பேக்கரி கடந்த 137 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வருகிறது. சென்னையின் மிகவும் பழமையான பேக்கரிகளில் இதுவும் ஒன்று. இது 1885 ஆம் ஆண்டு முதல் பலவிதமான பழ கேக்குகள் மற்றும் இனிப்பு வகைகளை தயாரித்து வருகிறது. 135 ஆண்டுகளுக்கு முன், சதரஸ்பட்டினத்தைச் சேர்ந்த பொ.பொன்னுசாமி நாயக்கர் இந்த பேக்கரியை நிறுவினார். பிறகு, இந்த பேக்கரிக்கு பிரிட்டிஷ் அதிகாரி இ. கான்ரன் ஸ்மித் பெயரிடப்பட்டது. இது பழைய பிரிட்டிஷ் முறையில் சுடப்படும் ரொட்டிகள், பிஸ்கட்கள் மற்றும் கேக்குகளுக்குப் புகழ்பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.