மூவி பஃப் - பர்ஸ்ட் கிளாப் நடந்திய சீசன் 2 குறும்பட போட்டியில் கலந்துகொண்ட 750 படங்களில் டாப் 5 குறும்படங்களில் டாப் 5 குறும்படங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்ட படம் தான் குக்கருக்கு விசில் போடு.
இயக்குனர் ஷியாம் சுந்தர் இயக்கத்தின் வெளியான இந்த குறும்படம் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. கடந்த ஜுன் 29 ஆம் தேதி முதல் பல்வேறு திரையரங்குகளிலும் ஒளிப்பரப்பட்ட இந்த குறும்படம், தமிழகத்தின் தற்போதைய அரசியலை புட்டு புட்டு வைத்துள்ளது.
இந்த குறும்படத்தை இயக்கிய இயக்குனருக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. இந்த குறும்படத்தை பார்க்கும் பலரும் , “அட யாருப்பா இந்த பசங்க இப்படி வச்சி செஞ்சிருங்காக “ என்று தான் கேட்க வைக்கிறது.
மூவி பஃப் - பர்ஸ்ட் கிளாப் நடத்திய இந்த குறும்பட போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் படங்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. அத்துடன் இது தவிர தேர்வு பெறுபவர்களிடம் சூர்யாவின் 2டி நிறுவனம் சார்பில் கதை கேட்டு சிறந்த கதையாக இருக்கும் பட்சத்தில் அதை திரைப்படமாக உருவாக்கவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.