Advertisment

திண்டுக்கல் சீனிவாசனாகும் ஸ்டாலின்: குடியரசு தின தேதியை 2 முறை தவறாக கூறும் வைரல் வீடியோ

ஒரு கூட்டத்தில் குடியரசு தினத்தை ஜனவரி 25 என்கிறார். சிறிது நேரம் கழித்து தண்ணீர் அருந்தியபின், மீண்டும் குடியரசு தினம் ஆகஸ்ட் 25 என தவறாகவே சொல்கிறார்.

author-image
WebDesk
New Update

தரவுகளையும், கருத்துகளையும் தவறாக பேசுவதில் வல்லவர்கள் அதிமுக அமைச்சர்கள். “மக்கள் சோப்பு போட்டு குளிப்பதால்தான் நொய்யல் ஆற்றில் நுரை வருகிறது”, என அமைச்சர் கருப்பணன் சமீபத்தில் கூறி நமக்கு சிரிப்பை வரவழைத்தார். அந்த கேலி கூத்தே அடங்காத நிலையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நம்மை பலமுறை விழுந்து விழுந்து சிரிக்க வைத்திருக்கிறார். “அம்மா மருத்துவமனையில் இட்லி சாப்பிட்டாங்கன்னு பொய் சொன்னோம்”, “பிரதமர் மன்மோகன் சிங்”, இப்படி பல உளறல்கள் திண்டுக்கல் சீனிவாசனுக்கு சொந்தமானவை.

Advertisment

அதிமுக அமைச்சர்கள்தான் இப்படியென்றால், இப்போது அந்த பட்டியலில் புதிதாக இணைந்திருப்பவர் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். ஒரு கூட்டத்தில் குடியரசு தினத்தை ஜனவரி 25 என்கிறார். சிறிது நேரம் கழித்து தண்ணீர் அருந்தியபின், மீண்டும் குடியரசு தினம் ஆகஸ்ட் 25 என தவறாகவே சொல்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment