'ஜோக்கர்' பட இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகி வரும் `ஜிப்ஸி' படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
Advertisment
ராஜுமுருகன் இயக்கிய 'ஜோக்கர்' திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கும் அடுத்த படத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு, 'ஜிப்ஸி' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஜீவாவுக்கு ஜோடியாக மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளரும், மிஸ் இமாச்சலப்பிரதேசம் பட்டம் வென்றவருமான நடாஷா சிங் நடிக்கிறார்.
இவர், பாலிவுட்டில் விளம்பரப் படங்களிலும் டிவி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். 'குக்கூ' படத்தைத் தொடர்ந்து, மீண்டும் ராஜுமுருகனுடன் இசையமைப்பாளராகக் களமிறங்குகிறார் சந்தோஷ் நாராயணன். செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, 'அருவி' படத்தின் படத்தொகுப்பை மேற்கொண்ட ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா, இப்படத்தை எடிட் செய்கிறார்.
நாடு முழுவதும் பயணம் செய்யும் ஒரு இளைஞனின் காதல் கதையைக் கொண்டு உருவாகி வருகிறது 'ஜிப்ஸி'. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தயாராகி வரும் இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது.
Advertisment
Advertisement
இதுவரை, 8 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ள இந்த டீசருக்கு, நெகட்டிவ் விமர்சனம் என்பது ஒன்று கூட வரவில்லை. 50 ஆயிரம் பேர் லைக் செய்துள்ள இந்த டீசருக்கு 1000க்கும் குறைவானோரே டிஸ்லைக் செய்துள்ளனர். பெருவாரியான ரசிகர்களின் வரவேற்பை படம் வெளியாவதற்கு முன்பே ஜிப்ஸி டீம் பெற்றுள்ளது. நீண்ட நாட்களாக வெற்றிக்காக காத்திருக்கும் நடிகர் ஜீவாவுக்கு, ஜிப்ஸி பிரேக் கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.