பிரதமர் நரேந்திர மோடியின் சிறு வயது வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டு குறும்படம், 'சலோ ஜீதே ஹெய்ன்'. மங்கேஷ் ஹடவாலே என்பவர் இயக்கியிருக்கும் இக்குறும்படம் 32 நிமிடங்கள் நீளம் கொண்டது. கடந்த புதன் கிழமையன்று, மாநிலங்களவை செயலகத்தில் இந்த குறும்படம் திரையிடப்பட்டது. இதனை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு. , மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், ரவி ஷங்கர் பிரசாத், ராஜ்யவர்தன் ரத்தோர், ஜெயந்த் சின்ஹா மற்றும் ஜேபி நட்டா ஆகியோர் இதனை கண்டு களித்தனர்.
Advertisment
இக்குறும்படம், பிரதமர் மோடியின் இளம் வயதில் நடந்த சம்பவங்களை குறிப்பிட்டு எடுக்கப்பட்டவை அல்ல. அவரின் இளம் வயது நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்டு, அதன் பாதிப்பில் வேறொரு கதைக்களத்தில் எடுக்கப்பட்ட குறும்படம் இதுவென இயக்குனர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் ஜனாபதியின் ராஷ்டிரபதி பவனிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய் அன்று, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த இப்படத்தை பார்த்துள்ளார். இதுகுறித்து ஜனாதிபதியின் பத்திரிகை செயலாளர் அசோக் மாலிக் கூறுகையில், "அந்த குறும்படத்தை எடுத்தவர்கள், இதுவொரு அப்பாவித்தனமான சிறுவயது பற்றியும், சிறுவர்கள் தங்களுக்குள் எந்தவித எதிர்பார்ப்புமின்றி செய்து கொள்ளும் உதவிகள் குறித்தும் பேசும் படம். இதனை ஜனாதிபதிக்கு திரையிட்டு காண்பிக்க விரும்புகிறோம் என எங்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதனால், அப்படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த பார்த்து, படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்தார்" என்று குறிபிட்டுள்ளார்.
राष्ट्रपति कोविन्द ने राष्ट्रपति भवन में आज एक विशेष स्क्रीनिंग में फिल्म ‘चलो जीते हैं’ देखी। मंगेश हदावले द्वारा निर्देशित इस फिल्म में बचपन, मासूमियत और भाई-चारे की कहानी दर्शाई गई है। pic.twitter.com/MVAA9N1rdf
— President of India (@rashtrapatibhvn) July 24, 2018
இந்த குறும்படத்தில் நடித்துள்ள சிறுவனுடைய கதாபாத்திரத்தின் பெயர் 'நரு'. அவன் தனது பெற்றோர்கள் மற்றும் பலரிடம் சென்று, 'இந்த வாக்கியத்தை படித்த பிறகு, நீங்கள் எதற்காக வாழ்கிறீர்கள் என்று சொல்லுங்கள்' என கேட்கிறான். அந்த வாக்கியம், 'மற்றவர்களுக்காக வாழ்பவரே வெற்றியாளர் ஆகிறார். இப்படி கேட்கும் சிறுவன் தான் நரேந்திர மோடி. இதுதான் இந்த குறும்படத்தின் கதையாகும்.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news