கர்நாடகாவில் ரெய்ச்சூர் மாவட்டத்தில் பரபரப்பான பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் 4 பேர் கொண்ட ஒரு கும்பல் ஆயுதங்களுடன் வந்து ஒருவரை காரில் கடத்திச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு பின்னணி காரணம் என்ன என்று இதுவரை கண்டறியப்படவில்லை.
கர்நாடகா மாநிலம், ரைச்சூர் மாவட்டத்தில் உள்ளது லிங்காசுகூர் பேருந்து நிலையம். இந்த பேருந்து நிலையத்திற்கு அருகில் சேகரிக்கப்பட்ட சிசிடிவி வீடியோ காட்சிகள் பலரையும் அதிர்ச்சிய அடையச் செய்துள்ளது. அந்த வீடியோ காட்சியில், ஒரு நபர் தன்னை நோக்கி வந்த இரண்டு நபர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். பின்னர், அவர்கள் அவரை ஒரு காருக்குல் இழுத்துச் சென்றனர்.
ரெய்ச்சூர் காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி.) சி.பி.வேதமூர்த்தி இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு கூறுகையில், “ இந்த சிசிடிவி வீடியோ காட்சிகள் ஒரு ஜவுளி கடையிலிருந்து பெறப்பட்டது. அதில்,கருப்பு நிற கூரை கொண்ட வெள்ளை கார் மகாராஷ்டிரா மாநிலத்தில் பதிவு செய்யப்ப்பட்டது என்பதையும் அது அடையாளம் தெரியாமல் மாற்றம் செய்யப்பட்டிருந்ததை கண்டுபிடிதுவிட்டோம். காருக்குள் 2 பேர் அமர்ந்திருந்தனர். இரண்டு பேர் கீழே இறங்கி நடைபாதையில் நின்று கொண்டிருந்த நபரை அணுகி இழுத்தனர். அந்த நபர் கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்து கூச்சலிடவே பொதுமக்கள் அந்த நபரை மீட்க வந்தபோது, குற்றவாளிகள் ஒரு கைத்துப்பாக்கி மற்றும் எஃகு கம்பியைப் பயன்படுத்தி கூட்டத்தை அச்சுறுத்தியுள்ளனர்” என்று வேதமூர்த்தி கூறினார்.
#Karnataka| Man abducted by gang of 4 in cinematic style next to Lingasugur bus stand in Raichur district. Kidnappers use pistol, rod to keep people away from helping victim. Police investigation underway. @IndianExpress | @IExpressSouth pic.twitter.com/Bn3fkE46r5
— Ralph Alex Arakal (@ralpharakal) November 17, 2019
“கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகன எண்ணை எம்.எச் 14 - 3566 என போலீசார் அடையாளம் காண முடிந்தாலும், அவர்களால் பதிவு எண்ணின் தொடரை முழுமையாக அறிய முடியவில்லை. இந்த எண் தொடரைக் கொண்ட அனைத்து கார்களையும் நாங்கள் பட்டியலிட்டுள்ளோம். மேலும் கடத்தல்காரர்களையும் காரையும் விரைவில் கண்டுபிடிப்போம் என்று நம்புகிறோம்” என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, லிங்காசுகூர் காவல் நிலையத்தில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 323 (தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்துதல்), 341 (தவறான நடவடிக்கை), 365 (இரகசியமாகவும் தவறாகவும் நபரைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் கடத்தல் அல்லது ஆள் கடத்தல்), 504 (அமைதியை மீறும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதித்தல்) 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“ஒரு முழுமையான விசாரணை நடந்து வருகிறது, எங்கள் அதிகாரிகள் இப்போது கடத்தல்காரர்களைக் கண்டுபிடிப்பதற்கான இடங்களையும் சரிபார்க்கிறார்கள்” என்று ரெய்ச்சூர் எஸ்.பி. கூறினார்.
பட்டப் பகலில் பரபரப்பான பேருந்து நிலையத்தில் ஒரு நபரை ஆயுதங்களுடன் வந்து காரில் கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.