Navy officer doing push-ups at his wedding: திருமண நாள் ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத நாள்தான். அதுவும் திருமணத்தன்று மாப்பிள்ளை தண்டால் எடுத்து அந்த வீடியோ வைரல் ஆனால் எப்படி இருக்கும்?
கேரளாவைச் சேர்ந்த ஒரு கடற்படை அதிகாரியின் திருமணத்தன்று அவருடைய சகாக்கள் வாளுடன் ஒரு அணிவகுப்பு வணக்கம் செலுத்துகின்றனர். பின்னர், அதிகாரி மாப்பிள்ளையை ஜாகிங், தண்டால் செய்ய வைத்த நிகழ்வு இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.
@sandythapar Sir, this is the first part I guess. #wedding#indiannavy#India#Keralapic.twitter.com/RIDxYFpBzK
— Binosh Alex Bruce (@binosh) August 29, 2019
அந்த வீடியோவில், கேரளாவைச் சேர்ந்த ஒரு கடற்படை அதிகாரியின் திருமணத்தன்று அவருடைய சகாக்கள் வாளுடன் ஒரு அணிவகுப்பு வணக்கம் செலுத்துகின்றனர். பின்னர், அவர்கள் மாப்பிள்ளையை ஜாகிங் செய்யச் சொல்கின்றனர். மாப்பிள்ளையும் ஜாகிங் செய்கிறார். அருகில் இருக்கும் அவருடைய மனைவி கணவர் ஜாகிங் செய்வதை புன்னகையுடன் பார்க்கிறார்.
Course mates and colleagues having fun on your wedding ! pic.twitter.com/7k0coCJqzJ
— Sandy Thapar (veteran) (@sandythapar) August 28, 2019
மாப்பிள்ளையின் ஜாகிங் முடிந்தவுடன் அந்த கடற்படை அதிகாரியின் சகாக்கள் மணமக்களை ஓரிரு அடி நடந்தவுடன் மனமகனை வாள் கோட்டையில் தடுத்து அவரை தண்டால் எடுக்க சொல்கின்றனர்.
மணமகனும் தண்டால் எடுக்கிறார். அதை அவர் அருகில் நின்றிருக்கும் அவரது மனைவி வெட்கம் கலந்த புன்னகையுடன் பார்க்கிறார். மாப்பிள்ளையின் தண்டால் முடிந்தவுடன் அவரது சகாக்கள் மாப்பிள்ளையை விடுவிக்கின்றனர். இதையடுத்து, அந்த கடற்படை அதிகாரியான மாப்பிள்ளை தனது மனைவியை அன்புடன் முத்தமிடுகிறார்.
இந்த அழகான நிகழ்வை அங்கே இருந்தவர்கள் வீடியோ படம் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளனர். இப்போது அந்த வீடியோ வைரலாகி உள்ளது. வீடியோவை பார்ப்பவர்கள் மனமக்களை வாழ்த்திவருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.