தெலுங்கு திரையுலகின் 'பிரின்ஸ்'... நடிகர் மகேஷ் பாபு. இவருக்கென்று மாபெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. ஒரு காலத்தில் இவரின் படங்களைத் தான் நம்ம விஜய் ரீமேக் செய்து நடித்துக் கொண்டிருந்தார். கில்லி, போக்கிரி படங்கள்லாம் இவரது ஒக்கடு, போக்கிரியின் ரீமேக் தான். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், இங்கு அஜித் - விஜய் எப்படியோ, அதுபோல ஆந்திரா, தெலங்கானாவில் பவன் கல்யாண் - மகேஷ் பாபு.
Advertisment
இவர் கடந்த ஆண்டு தமிழ், தெலுங்கு என இரண்டிலும் பைலிங்குவலாக நடித்த படம் ஸ்பைடர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இப்படம் மிக சுமாரான படமாக மகேஷ் பாபுவிற்கு அமைந்தது. இரு மொழியிலும் இப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல ஸ்டான்ட் அப் காமெடியன் மனோஜ் பிரபாகர் ‘ஸ்பைடர்’ படத்தில் மகேஷ் பாபுவின் நடிப்பை பற்றி கிண்டல் செய்து ஒரு ஷோவில் பேசினார். குறிப்பாக, மகேஷ்பாபுவை ஆண் கத்ரீனா கைஃப் என்றும், இரு அசையா பாறைகளின் படத்தைக் காண்பித்து 'மகேஷ் ராக்ஸ்' என்றும் கிண்டல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து மகேஷ் பாபுவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்தனர். பின், அதற்கு மனோஜ் பிரபாகரும் மன்னிப்பு கேட்டார். தற்போது, மனோஜ் பிரபாகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் நடிகர் சங்கத்துக்கு தெலுங்கு நடிகர் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், மனோஜ் பிரபாகர் நடிகர் சங்கத்தில் உறுப்பினரே கிடையாது என்பது தான் ஹைலைட். அதுதெரியாமல், தெலுங்கு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
இங்கே ஏற்கனவே வாய்க்கா பிரச்சனை... இதுல சங்கத்துலயே இல்லாத ஆளுக்கு நோட்டீஸ் விட்டா, அப்படியே பதில் வந்து சேர்ந்த மாதிரி தான்!.