நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பில், இயக்குநர் லெனின் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
Advertisment
மேற்கு தொடர்ச்சி மலை படத்தின் டிரெய்லர்:
`வெண்ணிலா கபடி குழு', 'நான் மகான் அல்ல' படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்த லெனின் பாரதி இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை தயாரிப்பது மட்டுமின்றி நடித்துமுள்ளார் விஜய் சேதுபதி. படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தாலும் அவரை முதன் முறையாக டிரெய்லரில் காட்டமாலே வெளியிட்டுள்ளனர். இதுபோல் விஜய் சேதுபதியை காட்டாமல் வெளியிடும் முதல் டிரெய்லர் இது தான். படத்தின் டிரெய்லர் முழுவதும் வுஜய் சேதுபதி எங்கே காணோம் என்றே ரசிகர்கள் தேடினர்.
Advertisment
Advertisements
இப்படம் முழுக்க முழுக்க மேற்கு தொடர்ச்சி மலையில் வாழும் மக்களின் வாழ்க்கையை கதையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதை இப்படம் காட்டும் என்று விஜய் சேதுபதி கூறியிருக்கிறார்.