Watch Video: தமிழ் நடிகர்களுக்கு வாய்ப்புகள் கம்மியா இருக்கு.. வனிதா விஜயகுமார்!
இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்-க்கு பதில் அளித்த வனிதா விஜய்குமார், பெண்கள் முன்னேற்றத்தை பற்றியும், தமிழ் நடிகர்களின் நிலை பற்றியும் பேசினார். இதோ அந்த வீடியோ!
பெங்காலியில், வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரணாயினி என்ற சீரியல் தமிழில் 'மாரி' என்ற பெயரில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. எதிர்காலத்தில் நடப்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் கதாநாயகி , அதனால் ஏற்படும் விளைவுகளை பரபரப்பாக சொல்லும் கதைக்களம்தான் 'மாரி'. நடிகை ஆஷியகா, இந்த சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் எண்ட்ரி கொடுக்கிறார். அத்துடன், சேது புகழ் அபிதா, டெல்லி கணேஷ், வனிதா விஜயகுமார், நடிகர் பாண்டியராஜன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த சீரியலில் நடிக்கின்றனர். இந்நிலையில், இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்-க்கு பதில் அளித்த வனிதா விஜய்குமார், பெண்கள் முன்னேற்றத்தை பற்றியும், தமிழ் நடிகர்களின் நிலை பற்றியும் பேசினார். இதோ அந்த வீடியோ!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“