ஆண்டாள் தாயார் அருளிய திருப்பாவையின் 12ம் பாசுரத்திற்கு விளக்கம் கொடுக்கிறார் பெருமாள் மணி. எருமைகள் கன்றுக்கு இறங்கி பால் சுரந்து முற்றமெல்லாம் சேறாகிவிட்டது, அதில் பொழிகின்ற பனியில் நின்று தங்கள் தோழியை துயில் எழுப்புவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்?
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.