ஆண்டாள் தாயார் மாமன் மகளே என்று உரிமையோடு ஆயர்பாடி பெண்ணை அழைத்து எழுந்து வரச் சொல்லுகிறார். அப்படியும் தூங்கிக் கொண்டிருக்கிற பெண்ணின் தாயைப் பார்த்து, 'மாமி! உன் மகள் ஊமையா, செவிடா?' என்று உரிமையோடு கேட்கிறார்.
நாராயணனுடைய திருநாமங்களை பேசுவதற்கு பாடுவதற்கு உரிய காலத்தில் எழுந்து வர வேண்டும் என்று ஆண்டாள் தனது தோழிக்குச் சொல்வதாக நமக்கெல்லாம் எம்பெருமானுடைய பெருமைகளை சொல்கிறார்.
மாமான் மகளே மணிக்கதவம் தாள் திறவாய் ;
மாமீர் அவளை எழுப்பீரோ? உன்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
'மாமாயன், மாதவன், வைகுந்தன்' என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.