ஆஸ்திரேலியாவில் லைட்டரை மென்று தீப்பற்ற வைத்த நாய்க்குட்டி; வைரல் வீடியோ
மெல்போர்னில் ஒரு பத்து மாத நாய்க்குட்டி, தனது வாயில் ஒரு லைட்டரை கவ்வி எடுத்துச் சென்று மென்று தீப்பற்ற வைத்து தீ விபத்தை ஏற்படுத்திய வீடியோ வைரலாகி உள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக நாய்க்குட்டிக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
மெல்போர்னில் ஒரு பத்து மாத நாய்க்குட்டி, தனது வாயில் ஒரு லைட்டரை கவ்வி எடுத்துச் சென்று மென்று தீப்பற்ற வைத்து தீ விபத்தை ஏற்படுத்திய வீடியோ வைரலாகி உள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக நாய்க்குட்டிக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
Advertisment
ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் ஒரு பத்துமாத வயதுள்ள நாய்க்குட்டி ஒன்று விட்டுக்குள் இருந்த லைட்டரை தனது வாயில் கவ்விக்கொண்டு படுக்கைக்கு எடுத்துச்செல்கிறது. பின்னர், அந்த நாய்க்குட்டி லைட்டரை மெல்லும் பொம்மையாக நினைத்து மெல்கிறது அப்போது திடீரென லைட்டர் ஆன் ஆகி படுக்கை தீப்பிடிகிறது. இதைப்பார்த்து பயந்துபோன நாய்க்குட்டி பின்ன இறங்கி ஓடுகிறது. இந்த காட்சி அங்கே பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்புக் கேமிராவில் வீடியோவாக பதிவாகியுள்ளது. அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.
இது குறித்து நாய்க்குட்டியின் உரிமையாளர் பெண் ஆஸ்திரேலியாவின் 9 நியூஸ் தொலைக்காட்சிக்கு கூறுகையில், “வீட்டுக்குள் ஒரு நான்கு நிமிடம் நாய்க்குட்டியை தனியாக விட்டுவிட்டு சென்றோம். அதற்குள் இப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.
“அது ஏதோ டிவியில் இருந்து எதையோ இழுத்திருக்க வேண்டும் அதனால்தான் பெட் தீப்பிடித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.” என்று அந்த நாய்க்குட்டியின் உரிமையாளர் லோக்கல் டிவிகு தெரிவித்துள்ளார்.
மேலும், வீட்டுக்குள் தீப்பிடித்ததை சிசிடிவி மூலம் பார்த்த அவர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரித்துள்ளார். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக நாய்க்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த தீ விபத்தில் 60,000 ஆஸ்திரேலிய டாலர்கள் மதிப்புள்ள பொருட்கள் சேதமானதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.