சாண்டியாகோவில் உள்ள ஒரு நாய் தனது உரிமையாளர் அளித்த பேச்சுப் பயிற்சியின் மூலம், மனிதர்களுடன் எப்படி தொடர்புகொள்ள வேண்டும் என்பதை தெரிந்துகொண்டு சிறப்பு விசைப்பலகை மூலம் பேசுவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கலிஃபோர்னியாவில் உள்ள சாண்டியாகோ நகரில் வசிப்பவர் கிறிஸ்டினா ஹங்கர் என்ற பெண். இவர் பேச்சுப் பயிற்சி அளிக்கும் வேலை செய்துவருகிறார். இவர் ஸ்டெல்லா என்ற நாயை வளர்த்து வருகிறார்.
கிறிஸ்டினா ஹங்கர் ஒரு வித்தியாசமான முயற்சியாக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு விசைப் பலகை கருவியைக்கொண்டு தான் வளர்க்கும் ஸ்டெல்லா நாய்க்கு மனிதர்களுடன் எப்படி தொடர்புகொள்வது என்று பேச்சுப் பயற்சியை அளித்துள்ளார். அந்த சிறப்பு விசைப்பலகையில், வா, விளையாடு, பார், பூங்கா என்று 29 சொற்களுக்கு பட்டன்கள் உள்ளன.
ஸ்டெல்லா நாய் தான் நினைப்பதை தெரிவிக்க அதற்கான பட்டன்களை அழுத்தி தன்னுடைய உரிமையாளர் கிறிஸ்டினா ஹங்கரிடம் தெரிவிக்கிறது.
ஸ்டெல்லா சில நேரங்களில் இந்த விசைப்பலகையில் உள்ள வார்த்தை பட்டன்களை தொடர்ந்து அழுத்தி பேச முயற்சிக்கிறது. இதன் மூலம் ஸ்டெல்லா நாய் இணையத்தில் பிரபலமாகியுள்ளது.
View this post on InstagramA post shared by Christina Hunger, MA, CCC-SLP (@hunger4words) on
ஸ்டெல்லா நாயின் உரிமையாளர் கிறிஸ்டினா ஹங்கர் நாய் விசைப்பலகையின் பட்டன்களை அழுத்தி பேசுவதை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளார். இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.
View this post on InstagramA post shared by Christina Hunger, MA, CCC-SLP (@hunger4words) on
கிறிஸ்டினா வெளியிட்ட ஒரு வீடியோவில், வீட்டுக்கு வெளியே ஏதோ சத்தம் கேட்க ஸ்டெல்லா நாய் ‘பார்' என்ற பட்டனை தொடர்ந்து அழுத்தி கிறிஸ்டினாவுக்கு தகவல் தெரிவிக்கிறது.
பேச்சுப் பயிற்சியாளர் கிறிஸ்டினா ஹங்கர் அளித்த பயிற்சியின் மூலம் அவருடைய ஸ்டெல்லா நாய், மனிதர்களுடன் எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரிந்துகொண்டு பேசுவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.