மார்கழி மாதத்தின் 21 வது நாளான இன்று ஆண்டாள் அருளிய திருப்பாவையில் 21வது பாசுரத்தைச் சொல்லி அதற்கான விளக்கத்தையும் தருகிறார், பெருமாள் மணி.
அந்த பாடல் இதோ...
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்;
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்;
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து — ஏலோர் எம்பாவாய்.