தமிழகத்தில் தற்போது அனைத்து தரப்பு மக்களும் அதிகமாக பேசிக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால் அது மும்மொழிக் கொள்ளை பற்றி தான். இதுவரை தமிழகத்தில் இருமொழிக் கொள்கை அதாவது, தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே கல்வி மொழியாகவும் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்நிலையில், வரும் கல்வியாண்டில் மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தலாம் என்றும் இந்தி மொழியை மாணவர்கள் பயில வேண்டும் என்றும் மத்திய அரசு விருப்பம் தெரிவித்துள்ளது.மத்திய அரசின் இந்த கருத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு மற்றும் எதிர்புகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்திற்கு தமிழ், ஆங்கில போதும் என்பது சிலரின் கருத்தாக உள்ளதும். மேலும்,தேசிய மொழியான இந்தியை கற்பதில் தவறு ஏதும் இல்லை என்பது பிரதான கருத்தாக இருக்கிறது. எதிர்கட்சிகள் உட்பட தமிழ் ஆர்வலர்கள், கவிஞர்கள் சிலரும் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
உண்மையில், மும்மொழிக் கொள்கை குறித்து மாணவர்கள் மற்றும் தமிழக பெற்றோர்களின் கருத்து என்ன? அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை தெரிந்துக் கொள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் களத்தில் இறங்கியது. இதோ அவர்களின் மனநிலையை வீடியோவாக உங்கள் பார்வைக்கு கொண்டு வந்துள்ளோம்.