ட்விட்டரின் புதிய உரிமையாளர் எலன் மஸ்க்-கின் சர்ச்சை பேச்சுக்கள்; வீடியோ
ட்விட்டர் நிறுவனத்தின் புதிய உரிமையாளர் ஆனார் எலன் மஸ்க்; உலகில் அதிக தனிநபர் சொத்துக்கள் கொண்ட அவரின் கடந்த கால சர்ச்சை பேச்சுக்களின் வீடியோ தொகுப்பு இங்கே.
ட்விட்டர் நிறுவனத்தின் புதிய உரிமையாளர் ஆனார் எலன் மஸ்க்; உலகில் அதிக தனிநபர் சொத்துக்கள் கொண்ட அவரின் கடந்த கால சர்ச்சை பேச்சுக்களின் வீடியோ தொகுப்பு இங்கே.
ட்விட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க் வாங்குவதாக முடிவானதிலிருந்து இணைய உலகமே பரபரப்பாகியுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கான பேச்சு வார்த்தைகளின் போதே எலன் மஸ்க் ட்விட்டரில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று கூறிவந்தார். பேச்சு வார்த்தையில் முடிவுகள் எட்டப்பட்ட நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி இனி என்ன வேண்டுமானலும் நடக்கலாம் என கூறியிருந்தார்.
அவர் அவ்வாறு கூறியதற்கு காரணங்கள் இருக்கிறது. ஏனென்றால் எலன் மஸ்க்கின் கடந்த கால வரலாறுகள் அப்படி. எலன் மஸ்க் ட்விட்டரில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளார்.
Advertisment
Advertisements
இப்படி தான் கொரோனா தொற்றின் ஆரம்ப கட்டத்தில், கொரோனா உண்மையிலேயே இருக்கா; பதற்றம் தேவையற்றது என பதிவிட்டார்.
தற்போது உக்ரைன் விவகாரத்தில் உக்ரைனுக்கு உதவுவதாக அறிவித்ததோடு, ரஷ்ய அதிபர் புதினை சண்டைக்கு அழைத்தார் எலன் மஸ்க். இப்படி பல்வேறு சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டிருக்கும் எலன் மஸ்க சர்ச்சை பேச்சுகள் குறித்த வீடியோ தொகுப்பு இதோ…
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil