Atal Bihari Vajpayee Death News: முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இன்று (ஆகஸ்ட் 16) மாலை 5.05 மணிக்கு மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு சர்வ கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். 7 நாட்கள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 17) விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Advertisment
அவரின் பேச்சுகள், கவிதை, பெரும்பாலான மக்களால் அதிகம் ரசிக்கப்பட்டவை. அவரின் வரலாற்றை மீண்டும் திரும்பி பார்க்கும் விதமாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் சிறப்பு தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்கு..
வாஜ்பாய் தமிழ் பேச்சு :
1996ல் நடந்த பொதுத் தேர்தலில், பி.ஜே.பி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததால், அப்போதைய பிரதமரான ஷங்கர் தயால் ஷர்மா, வாஜ்பாயை பிரதமராகப் பொறுப்பேற்க சொன்னார். இந்தியாவின் 11வது பிரதரமராக வாஜ்பாய் பதவியேற்றார்.
Advertisment
Advertisements
ஆனால், மற்ற கட்சிகளின் ஆதரவு கிடைக்காததால், பதவியேற்ற 13 நாட்கள் கழித்து, பிரதமர் பதவியிலிருந்து வாஜ்பாய் ராஜினாமா செய்தார். நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற போதுமான ஆதரவு இல்லாததால் ஆவேசமாக உரையாற்றினார்.
அந்த உரையின் போது தான் தமிழ் கவிஞர் பாரதியின் வரிகளை தமிழிலியே சுட்டிக் காட்டினார். "முப்பது கோடி முகமுடையாள் ,உயிர் மொய்ம்புற வொன்றுடையாள் -இவள் செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள்" என்பதே அந்த கவிதை.