இந்திய சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் 74 ஆவது சுதந்திர தின விழா வழக்கம் போல் இல்லாமல அமைதியாக கொண்டாடப்பட்டு வருகிறது.டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று காலை சுதந்திர தின விழா நடைபெற்றது.கொரோனா காரணமாக சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் தடை செய்யப்பட்டன.
பிரதமர் மோடி, செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றினார். 75ஆவது ஆண்டு சுதந்திர தின விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் எனவும் தெரிவித்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக பிரபலங்கள் அனைவரும் வீட்டில் உள்ளனர். இந்த நேரத்தில் ஒட்டு மொத்த தென்னிந்திய கலைஞர்களின் சங்கமம்மாக ‘வந்தே மாதரம்’ என்ற பாடல் வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில் எஸ்.பி. பாலசுப்ரமணியம், பாடகர் ஹரிகரன், நடிகர் மோகன்லால் , ஸ்ரேயா கோஷல் என அனைத்து இசை கலைஞர்கள், நடிகர் நடிகைகள் ஒருசேர வந்தே மாதரம் என முழுங்குகின்றனர். அனைவரின் கவனத்தையும் இந்த வீடியோ ஈர்த்துள்ளது.
குறிப்பாக தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், பாடகர் எஸ்.பி.பி-யும் வீடியோவில் வருகிறார். அவரின் ரசிகர்கள் அதைப்பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.