விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் நடிப்பில் பி.ஆறுமுக குமார் என்பவர் இயக்கியிருக்கும் படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இதில், விஜய் சேதுபதி, "சீதையை கடத்திட்டு வந்து கைப்படாமல் வைத்திருந்தான் ராவணன். அவனை, அரக்கன்-னு சொல்றாங்க. அதே சீதையை காப்பாற்றி கொண்டு பொய், சந்தேக தீயில் போட்டு எரித்தான் ராமன். அவனை கடவுள்-னு சொல்றாங்க" என்ற வசனம் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
மெர்சல் படத்தில், கோயில் கட்டுவதற்கு பதில் மருத்துவமனை கட்டலாம் என விஜய் பேசிய வசனத்திற்கே பாஜகவினர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். குறிப்பாக, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இதனை கடுமையாக விமர்சித்தார்.
இந்தநிலையில், கடவுள் ராமர் குறித்த இதுபோன்ற வசனங்களை 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படக்குழு டீசரில் வைத்துள்ளனர். இதுபோன்று வசனம் இருந்தால், அதனை பாஜகவினர் விமர்சித்தால், படத்திற்கு நல்ல மார்க்கெட்டிங் கிடைக்கும் என படக்குழு நினைக்கிறதா என தெரியவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us