நடிகர் அதர்வா, நடிகை நயன்தாரா நடித்துள்ள இமைக்கா நொடிகள் படத்தின் விளம்பர இடைவெளி பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.
Advertisment
விளம்பர இடைவெளி :
'செம போத ஆகாதே' படத்திற்கு பிறகு அதர்வா நடிப்பில் உருவாகி வரும் படம் 'இமைக்கா நொடிகள்'. இந்த படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து டிமாண்டி காலனி படத்தை இயக்கியவர். சமீபத்தில் வெளிவந்த அதர்வா படங்கள் ரசிகர்களை பெரிதளவில் கவரவில்லை,
இந்நிலையில், இமைக்கா நொடிகள் திரைப்படம் அதர்வாவின் திரைப்பயணத்தில் மீண்டும் ஒரு திருப்புமுனையாக அமையும் என்கிறனர் அவருக்கு நெருக்கமானவர்கள். இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா டூயட் பாடி ஆடியுள்ளார்.
பவர்ஃபுல்லான வேடத்தில் நயன்தாரா நடித்துள்ளார். 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.
சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது.
தற்போது, இந்த படத்தில் இடம்பெறும் 'விளம்பர இடைவெளி' என்ற பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளனர். வெகு விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும். 'கேமியோ ஃபிலிம்ஸ்' நிறுவனம் சார்பில் சிஜே.ஜெயக்குமார் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.