/indian-express-tamil/media/media_files/2025/10/13/gold-biscuit-2-2025-10-13-18-02-29.jpg)
இன்று தங்கம் விலை நிலவரப்படி, 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.12,540 ஆக உள்ளது.
அக்டோபர் தொடக்கத்தில் இந்தியாவில் தங்கத்தின் விலை வியத்தகு அளவில் உயர்ந்ததையடுத்து, தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்காவின் பதிவு முதலீட்டு ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக தங்கத்தின் விலை உயர்ந்திருப்பதைக் குறிப்பிட்டுள்ள கோயங்கா, ஒரு கிலோ தங்கத்தின் மதிப்பு 2030-ம் ஆண்டில் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காருக்குச் சமமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். அதே ஒரு கிலோ தங்கம், 1990-ல் ஒரு மாருதி 800 காரை வாங்க உதவியது.
ஹர்ஷ் கோயங்கா எழுதியிருப்பதாவது: “1990: 1 கிலோ தங்கம் = மாருதி 800, 2000: 1 கிலோ தங்கம் = எஸ்டீம், 2005: 1 கிலோ தங்கம் = இன்னோவா, 2010: 1 கிலோ தங்கம் = ஃபார்ச்சூனர், 2019: 1 கிலோ தங்கம் = BMW, 2025: 1 கிலோ தங்கம் = லேண்ட் ரோவர்” என்று கூறிவிட்டு, மேலும், “பாடம்: அந்த 1 கிலோ தங்கத்தை வைத்திருங்கள் – 2030-ல் அது ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காருக்குச் சமமாக இருக்கும், 2040-ல் ஒரு தனிப்பட்ட ஜெட் விமானத்திற்குச் சமமாகவும் இருக்கலாம்!” என்று கூறியுள்ளார்.
வைரல் பதிவைப் பாருங்கள்:
1990: 1kg gold = Maruti 800
— Harsh Goenka (@hvgoenka) October 12, 2025
2000: 1kg gold = Esteem
2005: 1kg gold = Innova
2010: 1kg gold = Fortuner
2019: 1kg gold = BMW
2025: 1kg gold = Land Rover
Lesson: Keep the 1kg gold- in 2030 it may equal a Rolls Royce car and in 2040 a private jet🛩️! 😀
இந்த பதிவு விரைவாகப் பிரபலமடைந்து, பலதரப்பட்ட கருத்துக்களைத் தூண்டியது. பல பயனர்கள் இந்தியாவில் தங்கத்தின் விலை குறித்த தங்கள் நிலைப்பாட்டைப் பகிர்ந்து கொண்டனர். ஒரு பயனர், “அதனால்தான் இந்தியா ஒருபோதும் தங்கத்தை முதலீடாகக் கருதவில்லை — நிதி அமைப்பு வருவதற்கு முன் அது ஒரு காப்பீடாக இருந்தது. அமைதியான, தலைமுறைகள் கடந்து வரும் செல்வப் பாதுகாப்பு” என்று கூறினார்.
மற்றொரு பயனர், நடுத்தர வர்க்கத்தின் பாடத்திட்டத்தில் இல்லை. ஃபார்ச்சூனர், பி.எம்.டபிள்யூ, லேண்ட் ரோவர் வாங்குபவர்களுக்கு, இவை வெறும் எண்கள் மட்டுமே, அதனால், அவர்கள் கவலைப்படுவதில்லை” என்று கருத்துத் தெரிவித்தார்.
“பணக்காரராகக் காத்திருந்து, எப்போதும் ஏழையாக வாழ்வது முட்டாள்தனம்” என்று மூன்றாவது பயனர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் திங்கள்கிழமை தங்கத்தின் விலைகள் அனைத்துத் தூய்மை நிலைகளிலும் உயர்ந்தன. இந்தச் சீரான விலை உயர்வு, தங்கத்தின் மதிப்பீட்டைப் பாதிக்கும் சந்தை ஏற்ற இறக்கங்கள் மற்றும் அதிகரித்து வரும் தேவை ஆகியவற்றைக் காட்டுகிறது. உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்றைய தங்கம் விஐ நிலவரப்படி, 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.12,540 என்ற விலையில் உள்ளது, இது ரூ.32 அதிகரிப்பைக் குறிக்கிறது, அதே நேரத்தில் 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.11,495 ஆக உள்ளது, இது ரூ.30 உயர்ந்துள்ளது, மேலும் 18 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.9,405 என்ற விலையில் உள்ளது, இது ரூ.24 உயர்வைக் காட்டுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.