புலி வருது… புலி வருது… ஹெலிகாப்டருடன் சுற்றிவளைத்த ஆயுதப்படை

எனினும், அது உண்மை புலி இல்லை, மாறாக 85 வயசு நிரம்பிய ஜூலியட் சிம்ப்சன் என்ற பெண்  சிற்பி செதுக்கிய புலி சிற்பம் என்ற அதிரிச்சி தகவல் அவகர்ளுக்கு பின்னர் தான் தெரிந்தது.

By: Updated: May 5, 2020, 07:15:36 PM

இங்கிலாந்து கென்ட் நகரில் வாழும் பொது மக்கள் பெரிய புலி ஒன்று தங்கள் நோட்டமிடுவதாக  வந்த புகாரையடுத்து, பத்து ஆயுதமேந்திய காவல் அதிகாரிகளும் ஒரு ஹெலிகாப்டரும் நிறுத்தப்பட்டது.  ஆயுதமேந்திய காவல்துறையினர் பல வகையான யுக்திகளோடு தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். எனினும், அது உண்மை புலி இல்லை, மாறாக 85 வயசு நிரம்பிய ஜூலியட் சிம்ப்சன் என்ற பெண் சிற்பி செதுக்கிய புலி சிற்பம் என்ற அதிர்ச்சி தகவல் அவகர்ளுக்கு பின்னர் தான் தெரிந்தது.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் மெஷ் மற்றும் ரெசின் கொண்டு, உயிருடன் இருக்கும் புலி போன்ற இந்த சிற்பத்தை வடித்துள்ளார்.

“என் பாட்டி ஒரு சிற்பி. அவரை வடித்த புலி சிற்பத்தை உண்மை என்று நம்பி 10 ஆயுதமேந்திய போலீசாரும் ஒரு ஹெலிகாப்டரும் அவர் வீட்டை சுற்றி வளைத்துள்ளது”என்று அவரின் பேத்தி தனது  ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

ஜூலியட் சிம்ப்சன் கூறுகையில்,” அவர்கள் எனது சிற்பத்தை விரும்பினார்கள், உண்மையில் உயிர்  இருப்பதாக நினைத்தார்கள். இருப்பினும், மக்கள் கவலைகள் கேட்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

இந்த சம்பவம் தற்போது ட்விட்டரில் மிகவும் வைரலாகி வருகிறது.

 

 

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:10 armed police and a helicopter were deployed after walkers reported a tiger in the woods189098

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X