பொதுவாக பாம்புகள் நகரங்களில் பார்ப்பது என்பது அரிதாகிவிட்டது. பாம்புகள் எப்போதாவது வழி தவறி வீடுகளுக்குள் வந்து பார்த்திருக்கிறோம். அப்படி வீடுகளுக்குள் வந்த பாம்புகள் டாய்லட்டிலும், ஃபிரிட்ஜிலும் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு தீயணைப்பு மற்றும் வனத்துறையினரால் மீட்கப்பட்ட செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு உத்தரக்காண்ட்டில் சூப்பர் ஃபாஸ்ட் ரயிலில் 10 அடி நீளம் உள்ள கொடிய விஷம் கொண்ட ராஜநாகம் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பாம்பை ரயிலில் இருந்து பிடிக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரல் ஆகியுள்ளது.
#KingCobraRescue a 10 foot King Cobra snake was rescued by the UKFD rescue team along with RFP Kathgodam Railway Station, India. Both the teams ensured safekeeping of passengers, mob, keeping the train on schedule & rescuing the animal. Later King Cobra was released in the forest pic.twitter.com/Y2I1ghc6Cl
— Dr. PM Dhakate (@paragenetics) November 23, 2019
உத்தரக்காண்ட் மாநிலத்தில் இயக்கப்படும் ஒரு சூப்பர் ஃபாஸ்ட் ரயில் அம்மாநிலத்தில் உள்ள கத்கோடம் ரயில் நிலையத்தில் ரயில் நின்றது. அப்போது, ரயிலில் பயணிகள் ஏறும் கம்பார்ட்மெண்ட் கதவுக்கு கீழே ரயில்பெட்டியின் வேகனில் 10 அடி நீளம் உள்ள கொடிய விஷம்கொண்ட ராஜநாகம் சுருண்டு இருப்பது ரயில்வே ஊழியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு போலீசாருக்கும் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்துவந்த இரண்டு துறையினரும் துரிதமாக செயல்பட்டு பயணிகளுக்கு பாதிப்பில்லாத வகையில் ராஜநாகத்தைப் பிடித்தனர். ரயிலில் இருந்து மீட்கப்பட்ட ராஜநாகம் வனத்துறையினரால் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.
கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்...மக்கள் அதிர்ச்சி! நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.
ராஜநாகத்தை ரயிலில் இருந்து பாதுகாப்பாக பிடித்து மீட்கும்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி உத்தரக்காண்ட் வனத்துறையின் ஃபீல்ட் ஃபாரஸ்டர் டாக்டர் பி.எம்.தகாத்தே தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இதையடுத்து ரயிலில் இருந்து ராஜநாகம் மீட்கப்படும் வீடியோ டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரல் ஆனது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.