சின்ன துணிச்சல் : உலகளவில் ட்ரெண்டான 10 வயது மாணவி

இந்த கேள்வி முறையில்லாமல் உள்ளது, இதற்கு என்னால் பதில் சொல்ல முடியாது

Rhythm Pacheco Trending Videos: அமெரிக்காவில் உட்டா என்ற மாநிலத்தில் நான்காம் வகுப்பு மாணவி, பெண்களின் இடையை ஒப்பிட்டு கூறும் கணக்கிற்கு பதில் சொல்ல மறுத்தவிதம் ஆன்லைனில் தற்போது மிகவும் வைரலாகி வருகின்றது.

முர்ரேயில் உள்ள கிராண்ட் தொடக்கப் பள்ளியில் படிக்கும் ரிதம்  என்கிற பத்து வயது மாணவிக்கு சமீபத்தில் ஒரு வீட்டுப்பாடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் பெண்களின் உடல் எடை சம்பந்தப்பட்ட ஒரு கேள்வி மிகவும்  முரண்பாடாக இருந்ததால்  ரிதமிற்க்கு சங்கடங்களை உருவாக்கியது.

 

அந்தக் கணக்கு பின் வருமாறு இருந்தது, “வலதுபுறம் உள்ள அட்டவணையில்  4ம் வகுப்பில் இருக்கும் மூன்று  மாணவர்களின் எடை அளவு குறிப்பிட்டுள்ளன. இலகுவான மாணவனை விட இசபெல் எவ்வளவு கனமானவர்? என்பதைக் கண்டுபிடி  ”

மேலே, உள்ள படத்தை ரிதம் பச்சேகோவின் பெற்றோர்கள் ஆன்லைனில் வெளியிட்டனர். அதில், “இந்த கேள்வி முறையில்லாமல் உள்ளது, இதற்கு என்னால் பதில் சொல்ல முடியாது என்பதாக தனது பென்சிலில் எழுதியிருந்தார் ரிதம் .

அந்த, 10 வயது குழந்தை இன்னும் ஒரு படி மேலே சென்று, ஏன் அந்த கேள்விக்கு தன்னால் பதில் சொல்ல முடியவில்லை என்ற விளக்கத்தையும் தனது ஆசிரியருக்கு கொடுத்துள்ளார்.

“அன்புள்ள திருமதி ஷா, உங்களை மனம் வருத்தம் அடைய வைப்பது எனது நோக்கமில்லை, ஆனால் இந்த கணக்கு நன்றாக இருந்தது என்று நான் நினைக்கவில்லை, ஏனெனில் அது  மக்களின் எடையைத் தீர்மானிப்பதாய்  உள்ளது. இதனால் , அந்த கேள்வியை என்னால் முடிக்க முடியவில்லை . இப்படிக்கு  – அன்புடன் உங்கள் ரிதம் ” என்ற தனது விளக்கத்தை கொடுத்தார்.


இது குறித்து பேசிய ரிதமின் தயார், ” ரிதம் அப்பாவும்,  நானும்  பெருமிதம் அடைந்தோம், எதற்கும் பயப்படாமல் தன்னுடைய உள்ளுணர்வைக் கேட்டு நடந்தாள், தவறு என்று தெரிந்ததற்காக எழுந்து நின்றாள். ரிதம் ஆசிரியர்  இந்த நிகழ்வை பெருமையாக நினைக்கும் அதே தருவாயில், ரிதத்திற்கான தேவைகளை கூர்ந்து கவனிக்க வேண்டிய அவசியத்தையும் பற்றி பேசுகிறார்.

சமூக ஊடகங்களில் மக்கள் அந்த சிறுமியை “அவர் நம்பிய விஷயங்களுக்காக எழுந்து நின்றதற்காக” புகழ்ந்தனர், மேலும் சிலர் இது போன்ற கேள்வியை உருவாக்கிய வெளியீட்டாளர்களைக் கண்டித்தும் வருகின்றனர்.

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: 10 yr old student rhythm pacheco standing up for what is right

Next Story
”எங்க போனாலும் விடமாட்டேன்” – சஃபாரி வந்த டூரிஸ்ட்டுகளுக்கு மரண பயத்தை காட்டிய சிங்கம்…Social Media viral videos trending lion chasing tourists
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com