Advertisment

102 வயதில் தடகளப் போட்டியில் சாதனை… 100 மீட்டர் ஜஸ்ட் இத்தனை விநாடி தானா!

சாம்பியன்ஷிப் போட்டியில் 4 ஆவது முறையாக கலந்துகொள்ளும் SAWANG, தாய்லாந்தின் மிக வயதான ஓட்டப்பந்தய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

author-image
WebDesk
New Update
102 வயதில் தடகளப் போட்டியில் சாதனை… 100 மீட்டர் ஜஸ்ட் இத்தனை விநாடி தானா!

தாய்லாந்தை சேர்ந்த 102 வயது Sawang Janpram , முதியவர்களுக்கான 100 மீட்டர் தடகளப் போட்டியில் இலக்கை 27.08 நொடிகளில் எட்டி சாதனை படைத்துள்ளார்.

Advertisment

கடந்த வாரம் நடைபெற்ற மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100-105 வயதினருக்கான அனைத்து பிரிவிலும் Sawangதங்கப் பதக்கத்தை வாங்கியுள்ளார். சாம்பியன்ஷிப் போட்டியில் 4 ஆவது முறையாக கலந்துகொள்ளும் அவர் , தாய்லாந்தின் மிக வயதான ஓட்டப்பந்தய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அவர் வட்டு ஏறிதல் மற்றும் 100 மீட்டர் ஓட்டப்பந்த போட்டிகளில் பங்கேற்கும் வீடியோவை, Reuters செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வீடியோவில் பேசிய அவர் , விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதன் மூலம், எனது உடல் வலிமையாகவும், ஆராக்கியமாகவும் உள்ளது. இதுதவிர பசியும் ஏற்படுகிறது. எனவே, நீங்கள் நன்றாக சாப்பிடுவீர்கள் என்றார்.

விளையாட்டு போட்டிக்கு தயார்ப்படுத்திட, SAWANG உள்ளூர் மைதானத்தில் ஒரு முறை நடைப்பயிற்சி செய்வது அல்லாமல் தனது மகளுடன் இரண்டு முறை நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்.

இதுகுறித்து பேசிய அவரது 70 வயதான மகள், "என் தந்தைக்கு எப்போதும் நேர்மறையான எண்ணங்கள் உண்டு. அவர் மன அளவிலும், உடல் அளவிலும் வலிமைமிக்கவர்" என்றார்.

ஆசியா மாஸ்டர்ஸ் தடகளத்தின் தலைவர் விவாட் விக்ரண்டனோரோஸ் கூறுகையில், முதியோர் பிரிவில் பங்கேற்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 1996 இல் சாம்பியன்ஷிப் தொடங்கிய சமயத்தில், இந்த பிரிவில் சுமார் 300 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால், தற்போது 35 முதல் 102 வயதுக்குட்பட்ட விளையாட்டுகளில் 2,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர் என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Thailand
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment