10, 12 பொதுத்தேர்வு வினாத்தாளில் கடினமான கேள்விகள் : தேர்வை புறம்தள்ளிய 10லட்சம் மாணவர்கள்!

அதே நேரத்தில் தேர்வை எழுதாமல் சென்ற மாணவர்களின் எதிர்காலம் குறித்த கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில், நடைபெறும் 10 மற்றும் 12 வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாளில் கடினமான கேள்விகள் கேட்கப்பட்டதால், 10 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதாமல் புறக்கணித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் கடந்த செவ்வாய்கிழமை தொடங்கி அடுத்த மாதம் 6 ஆம் தேதி வரை 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான பொது தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தேர்வில் கடந்த ஆண்டுகளை போல் மாணவர்கள் காப்பி அடிக்கக் கூடாது என்பதற்காக கடுமையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், வினாத்தாளிலும் கேள்விகள் சற்று கடினமாகவே கேட்கப்பட்டுள்ளன.

இந்த காரணத்திற்காக சுமார் 10 லட்சம் மாணவர்கள் தேர்வுகளை எழுதாமல் புறம் தள்ளியுள்ளனர். இந்த சம்பவம் அம்மாநில கல்வி அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அத்துடன், இந்த சம்பவம் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காதுகளுக்கு சென்றுள்ளது. இதுக்குறித்து, மூத்த கல்வி நிர்வாகியிடம் பேசிய அவர், 10 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதாதைக் குறித்து மிகவும் கவலையடைந்துள்ளார்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யோகி ஆதித்யநாத், “உ.பி நடைபெற்ற 10 மற்றும் வகுப்பிற்கான
முதல் நாள் நடைபெற்ற தேர்வில் 1.8 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதவில்லை. இரண்டாவது நாளில் நடைபெற்ற தேர்வில் 5 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதவில்லை. இதுவரை நடந்துள்ள 4 தேர்வுகளில் மொத்தம் 10 லட்சம் பேர் எழுதவில்லை. இந்த செய்தி என்னை மிகவும் வேதனையடைய வைத்துள்ளது. மாணவர்கள் தேர்வில் காப்பி அடிக்க அனுமதிக்கப்படவில்லை என்பதற்காகவும், வினாத்தாளில் கடினமான கேள்விகள் கேட்கப்பட்டு இருப்பதால் தான் மாணவர்கள் தேர்வுகளை எழுதாமல் புறக்கணித்ததாக கூறியுள்ளனர். அதே நேரத்தில் தேர்வை எழுதாமல் சென்ற மாணவர்களின் எதிர்காலம் குறித்த கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. இதற்கு ஒரே, வழி மாணவர்களுக்கு எளிமையான கேள்விகளை வினாத்தாளில் கேட்க வேண்டும்” என்று கூறினார்.

முதல்வரின் இத்தகைய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்வை புறக்கணித்த மாணவர்களுக்கு அறிவுரை கூறாமல் வினாத்தாளில் கேள்விகள் எளிமையாக கேட்கப்பட வேண்டும் என்று முதல்வர் பேசி இருப்பது கண்டிக்கதக்கது என்று சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close