Advertisment

காட்டில் கரடியை தைரியமாக டீல் செய்த ‘தில்’ சிறுவன்: வைரல் வீடியோ

இத்தாலியில் சிறுவன் ஒருவன் காட்டில் தன்னைப் பின் தொடர்ந்த கரடியைப் பார்த்து பயப்படாமல், அதை தைரியமாக சமாளித்து தப்பித்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
bear, bear attack, 12 year old escapes bear, Italy, bear boy viral video, Italy 12 year old boy, இத்தாலி சிறுவன், கரடியை தைரியமாக டீல் செய்த இத்தாலி சிறுவன், கரடி வீடியோ, சிறுவன் கரடி வீடியோ, வைரல் வீடியோ, brave boy deal with bear, twitter reactions, trending, indian express, tamil indian express news, tamil viral news, tamil viral video news, tamil video news

bear, bear attack, 12 year old escapes bear, Italy, bear boy viral video, Italy 12 year old boy, இத்தாலி சிறுவன், கரடியை தைரியமாக டீல் செய்த இத்தாலி சிறுவன், கரடி வீடியோ, சிறுவன் கரடி வீடியோ, வைரல் வீடியோ, brave boy deal with bear, twitter reactions, trending,

இத்தாலியில் சிறுவன் ஒருவன் காட்டில் தன்னைப் பின் தொடர்ந்த கரடியைப் பார்த்து பயப்படாமல், அதை தைரியமாக சமாளித்து தப்பித்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.

Advertisment

வடக்கு இத்தாலியில் உள்ள ஸ்போர்மினோர் கிராமத்திற்கு அருகே 12 வயது சிறுவன் அலெசாண்ட்ரோ ஃபிரான்சோய் குடும்பத்தினருடன் நடைபயணம் மேற்கொண்டுள்ளான். அப்போது அங்கே இருந்த ஒரு புதரில் இருந்து தீடீரென ஒரு கரடி வெளியே வந்துள்ளது. அந்த கரடி முன்னால் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவன் அலெசாண்ட்ரோ ஃபிரான்சோயை நோக்கி வரத் தொடங்கியது. கரடி பின் தொடர்வதைப் பார்த்த சிறுவன் பயந்து ஓடாமல் அமைதியாக இருந்து அந்த கரடியை தைரியமாக கையாண்டுள்ளான். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, இந்த இத்தாலி சிறுவனை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

45 வினாடிகள் கொண்ட நீளம் உள்ள இந்த வீடியோவில், “ ஒரு கரடி திடீரென ஃபிரான்சோய் பின்னால் புதர்களில் இருந்து வெளிப்படுகிறது. ஆனால், இந்த 12 வயது சிறுவன் கரடியிடம் இருந்து மெதுவாக விலகிச் செல்கிறான். அவன் கரடி பின் தொடர்வதைப் பார்த்தும் பயப்படாமல், பயத்தில் ஓடாமால், தைரியமாக நடக்கிறான். அப்போது அங்கே இருந்த அந்த சிறுவனின் தாய், அவனிடம் கரடியை திரும்பிப் பார்க்கவோ, பீதியடையவோ கூடாது என்று சொல்கிறார். மேலும், கரடியை அச்சுறுத்தாமல் நடந்து வரச் சொல்கிறார்.

டெய்லி மெயில் வெளியிட்டுள்ள செய்தியில், அந்த சிறுவன் கரடிகளைப் பற்றியும், கரடியை எதிர்கொள்ளும் போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி படித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஒரு செய்தி வலைதளத்திடம் பேசிய சிறுவன் அலெஸாண்ட்ரோ ஃபிரான்சோய், “கரடி இருக்கும் இடத்தில் இருந்து விரைவாக விலைகி செல்வது முக்கியம். ஆனால், கரடிக்கு ஆபத்து இருப்பதாக காட்டாமல் செல்ல வேண்டும். நான் அதன் கண்களைப் பார்க்கவில்லை. நான் கரடியின் எதிரி இல்லை என்பதை அந்த கரடி புரிந்துகொண்டது.” என்று தெரிவித்துள்ளான்.

காட்டில் புதரில் இருந்து திடீரென வெளிப்பட்டு பிந்தொடர்ந்த கரடியை 12 வயது சிறுவன் அலேசாண்ட்ரோ ஃபிரான்சோய் பயப்படாமல் சமாளித்த வீடியோவை லோரிஸ் காலியரி டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது. காட்டில் கரடியை தைரியமாக டீல் செய்த இந்த தில் சிறுவனுக்கு நெட்டிசன்கள் பாராட்டுதல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment