ரூ.7,000 செலவில், 7 நாட்களில் விமானம்... 300 அடி உயரத்தில் பறந்து பீகார் சிறுவன் சாதனை!

பீகார் மாநிலம் முசாபர்பூரை சேர்ந்த 15 வயது அவினேஷ் குமார், பழைய பொருட்களை மட்டுமே பயன்படுத்தி, வெறும் 7 நாட்களில், சுமார் ரூ.7,000 செலவில் ஒற்றை இருக்கை விமானத்தை உருவாக்கி பறக்கவிட்டுள்ளார்.

பீகார் மாநிலம் முசாபர்பூரை சேர்ந்த 15 வயது அவினேஷ் குமார், பழைய பொருட்களை மட்டுமே பயன்படுத்தி, வெறும் 7 நாட்களில், சுமார் ரூ.7,000 செலவில் ஒற்றை இருக்கை விமானத்தை உருவாக்கி பறக்கவிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Flight Stuns Bihar

ரூ. 7,000 செலவில், 7 நாட்களில் விமானம்... 300 அடி உயரத்தில் பறந்து பீகார் சிறுவன் சாதனை!

ஆய்வகம் இல்லை, முறையான பயிற்சி இல்லை, தொழில்நுட்ப உபகரணங்கள் இல்லை. ஆனால், டீன் ஏஜ் சிறுவனின் அசாத்திய திறமையும், கண்டுபிடிப்புத் திறனும் சேர்ந்து வேலை செய்யும் விமானத்தையே உருவாக்கி, அதைப் பறக்க வைத்தும் சாதனை படைத்துள்ளான். பீகார் மாநிலம் முசாபர்பூரை சேர்ந்த 15 வயது அவினேஷ் குமார், பழைய பொருட்களை மட்டுமே பயன்படுத்தி, வெறும் 7 நாட்களில், சுமார் ரூ.7,000 செலவில் ஒற்றை இருக்கை விமானத்தை உருவாக்கி பறக்கவிட்டுள்ளார்.

Advertisment

அவினேஷ் குமார் தனது வீட்டில் வடிவமைத்த விமானம் புறப்பட்டு, கிட்டத்தட்ட 300 அடி உயரம் வரை பறக்கும் வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. 15 வயது சிறுவனின் இந்த வளமான கண்டுபிடிப்புத் திறனைப் பார்த்து பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். பலர் இதை "ஜுகாட்" (Jugaad) பொறியியலுக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்று புகழ்ந்துள்ளனர். இந்த வீடியோவில், அவினேஷ் தனது தற்காலிக விமானத்தில் நிதானமாக அமர்ந்து, என்ஜினை ஸ்டார்ட் செய்து, பார்வையாளர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் தரையிலிருந்து மேலே உயர்ந்து பறப்பதை காட்டுகிறது. சில நிமிடங்கள் பறந்தபிறகு, எந்தவொரு விபத்தும் இல்லாமல், சாதாரண முறையில் பாதுகாப்பாக தரையிறங்குகிறார். குப்பைகளிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு இயந்திரத்தை டீன் ஏஜ் சிறுவன் சாதாரணமாகப் பறக்கவிடுகிறான்.

உள்ளூர் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த அவினேஷ், சிறுவயதிலிருந்தே விமானம் தயாரிக்க வேண்டும் என்று தான் கனவு கண்டதாக கூறினார். "நான் எப்போதும் நானே உருவாக்கிய ஒன்றை பறக்கவிட விரும்பினேன். எதையும் வாங்க எனக்கு வசதியில்லை, பழைய பொருட்களைச் சேகரிக்க ஆரம்பித்தேன்," என்று கூறிய அவர், "இது கடினமாக இருந்தது, ஆனால் சாத்தியமற்றது என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை" என்றார்.

Advertisment
Advertisements

முசாபர்பூரில் இதுபோன்ற சுயம்பு விமானத் திறமை வெளிப்படுவது இது முதல் முறை அல்ல. 2 ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு இளைஞர், பி.ஏ. மாணவரான ரிக்கி ஷர்மா, தெர்மாகோல் மற்றும் மீன் சேமிப்புப் பெட்டிகளைப் பயன்படுத்தி "போர் விமானத்தை" உருவாக்கி செய்திகளில் இடம்பிடித்தார். அதுவும் 300 அடி உயரத்தை எட்டியது. ஆனால் ரிக்கியைப் போலல்லாமல், அவினேஷ் இயந்திரத்தை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், அதை ஓட்டியும் ஒருபடி மேலே சென்றுள்ளார்.

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: