விநாயகர் சதுர்த்தி அன்று காலை முதலே ரஜினி ரசிகர்கள் பரும் எதிர்பார்த்திருந்த ஒரு விஷயம் என்னவென்றால் அது 2.0 டீசர். ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாய் தயாராகி இருக்கும் திரைப்படம் 2.0. எந்திரனத்தின் 2ம் பாகமாக வெளிவரும் இந்த படத்தில் சூபப்ர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் ஸ்டார் அக்ஷய் குமார், எமிஜாக்சன் என்று நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
Advertisment
2.0 டீசர் ரிலீஸ் :
போன வருடம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட 2.0 பல்வேறு காரணங்களால் தள்ளி இறுதியாக நவம்பர் மாத திரைக்கு வரவிருக்கிறது. அதற்குள் படத்தின் டீசர் இன்று உலகமெங்கும் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. முன்பெல்லாம் ஒரு படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளியானால் அதை முதலில் பார்ப்போம்.
பிடித்திருந்தால் லைக் அண்ட் ஷேர்.. பிடிக்கவில்லை என்றால் டிஸ்லைக். ஆனால் சமீப காலமாக டீசரை ரிவீயு செய்யும் அளவிற்கு சமூகவலைத்தளங்களில் அப்டேட்டுக்களை செய்து வருகின்றனர் இணைய வாசிகள். அந்த வகையில் இன்று காலை வெளியான 2.0 டீசரின் ரிவீயுவை வழக்கம் போல் மீம்ஸ்களால் கொடுத்துள்ளனர் நெட்டிசன்கள்.
Advertisment
Advertisements
அதே நேரத்தில் ரஜினி ரசிகர்கள், படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் ஆகியோர் மகிழ்ச்சியுடன் தங்களது கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர். இந்த இரண்டும் இடையில் மற்றொரு தரப்பினர் 2.0 டீசர் என்னென்ன சாதனைகளை செய்ததை என்பதை பட்டியலிட்டு இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
இவை எல்லாவற்றையும் ஒரே தொகுப்பாக உங்களது பார்வைக்கு கொண்டு வந்து இருக்கிறோம்.