ஒரே நேரத்தில் 3 பாம்பு… அபாய விளையாட்டு… எச்சரிக்கை வீடியோ!

நெட்டிசன் ஒருவர் அவரது சமூக வலைதளத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து இந்த இளைஞர் வளர்ப்புப் பிராணிகளுடன் விளையாடுவது போன்று பாம்புகளுடன் விளையாடுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

நெட்டிசன் ஒருவர் அவரது சமூக வலைதளத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து இந்த இளைஞர் வளர்ப்புப் பிராணிகளுடன் விளையாடுவது போன்று பாம்புகளுடன் விளையாடுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
ஒரே நேரத்தில் 3 பாம்பு… அபாய விளையாட்டு… எச்சரிக்கை வீடியோ!

வட இந்திய இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் 3 பாம்புகளுடன் விளையாடி வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

இவருக்கு எதிரான கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.
இளைஞர் ஒருவர் காலி மைதானத்தில் அதிக விஷம் கொண்ட 3 நாக பாம்புகள் முன் அமர்ந்து அதனுடன் கையை அசைத்து விளையாடிக் கொண்டிருக்கும் வீடியோவை இந்திய வனத் துறை அதிகாரி சுசந்தா நந்தா டுவிட்டரில் பகிர்ந்தார்.

அந்தப் பதிவில், இது மிகவும் அபாயகரமானது. பாம்புகளுக்கு முன் கைகளை அசைத்து கொண்டிருக்கக் கூடாது. அது இயக்கங்களை பின்பற்றும். சில நேரங்களில் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ளது போன்றே அந்த வீடியோவில் முடிவில், அந்த இளைஞரின் காலில் ஒரு பாம்பு சீண்டத் தொடங்குகிறது. ஆனால், அதிருஷ்டவசமாக அவர் பேன்ட் அணிந்திருத்தால் தப்பித்தார்.

Advertisment
Advertisements

நண்பர்களே வேற ஒன்னும் இல்ல… இணையத்தை கலக்கும் “ஜாலியோ ஜிம்கானா” மீம்ஸ்!

நெட்டிசன்கள் இந்த வீடியோவை பகிர்ந்து அந்த இளைஞருக்கு எதிராக கருத்து பதிவு செய்துள்ளனர்.
நெட்டிசன் ஒருவர் அவரது சமூக வலைதளத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து இந்த இளைஞர் வளர்ப்புப் பிராணிகளுடன் விளையாடுவது போன்று பாம்புகளுடன் விளையாடுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு வனத் துறை அதிகாரி நவ்தீப் எஸ் ஹூடா வெளியிட்ட பதிவில், பஞ்சாபில் பாம்பை தவறாக கையாண்டபோது பிரபல பாம்பு பிடிக்கும் நபரான விக்ரம் சிங் மாலோட்டை பாம்பு தீண்டியது. இதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: