கிறிஸ்துவர்களின் புனிய நூலான பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள மன்னர் தாவீது மற்றும் சாலமோன் காலத்திற்கும் முந்தையது அந்த மண்பாண்ட ஜாடி. இஸ்ரேலில் இத பழமையான ஜாடியை 4 வயது சிறுவன் உடைத்த சம்பவம் வைரல் செய்தியாகி உள்ளது.
இஸ்ரேலில் உள்ள ஹைஃபா பல்கலைக்கழகத்தில் உள்ள ஹெக்ட் அருங்காட்சியகத்திற்குச் சென்றபோது 4 வயது சிறுவன், வெண்கல காலத்தைச் சேர்ந்த ஒரு அரிய கலைப்பொருள் - கி.மு 2200 மற்றும் 1500 கி.மு காலத்தைச் சேர்ந்த, 3,500 ஆண்டுகள் பழமையான ஜாடியை உடைத்துள்ளான். இந்த மண்பாண்ட ஜாடி ஆலிவ் எண்ணெய் மற்றும் ஒயின் போன்ற பொருட்களை சேமித்து வைக்க வடிவமைக்கப்பட்டது.
ஆங்கிலத்தில் படிக்க: Boy breaks 3,500-year-old rare artifact in Israel museum; here’s everything you need to know
பி.பி.சி செய்தியின்படி, இந்த ஜாடி அருங்காட்சியகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் பாதுகாப்பு கண்ணாடி இல்லாமல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ஏனெனில், தொல்பொருள் கண்டுபிடிப்புகளை தடைகள் இல்லாமல் பார்ப்பது அனுபவத்திற்கு ஒரு சிறப்பான அழகை சேர்க்கிறது என்று அருங்காட்சியகம் நம்புகிறது. ஜாடியை உடைத்த குழந்தையின் தந்தை அலெக்ஸ் பி.பி.சி செய்தியிடம், தனது மகன் ஜாடிக்கு உள்ளே என்ன இருக்கிறது என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்ததாகவும், அதனால், ஜாடியை லேசாக இழுத்ததாகவும் கூறினார்.
அலெக்ஸ் முதலில் தனது மகன் ஜாடியை உடைக்கவில்லை என்று நம்பினார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஹெக்ட் அருங்காட்சியகம் சிறுவனுக்கும் அவனது குடும்பத்தினருக்கும் ஒரு சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்தது. “காட்சிப் பொருட்கள் வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் உள்ளன, மேலும், இதுபோன்ற வழக்குகள் காவல்துறையை உள்ளடக்கியது உட்பட மிகுந்த தீவிரத்துடன் நடத்தப்படுகின்றன. இருப்பினும், இந்த வழக்கில், நிலைமை அப்படி இருக்கவில்லை. அருங்காட்சியகத்திற்குச் சென்ற ஒரு சிறு குழந்தையால் ஜாடி தற்செயலாக சேதமடைந்தது” என்று அருங்காட்சியகத்தின் பிரதிநிதி லிஹி லாஸ்லோ பி.பி.சி-யிடம் கூறினார்.
பி.பி.சி செய்தியின்படி, அருங்காட்சியகத்தின் அறிக்கையின்படி, மது மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற உள்ளூர் பொருட்களை எடுத்துச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஜாடி, பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள மன்னர்களான தாவீது மற்றும் சாலமோன் ஆட்சிக்கு முந்தைய காலத்திற்கு முந்தையது. இது கிழக்கு மத்திய தரைக்கடல் கடற்கரையில் உள்ள கானான் பகுதியிலிருந்து வரும் மட்பாண்டங்களின் சிறப்பியல்பு. பொதுவாக, தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்டங்கள் உடைந்த நிலையில் அல்லது முழுமையாக இல்லாமல் காணப்படுகின்றன. ஆனால், இந்த ஜாடியை அப்படியே, கவர்ச்சிகரமாக முழுமையாக கண்டுபிடிப்பாக இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.