பெற்றோர் காரைத் திருடி 5 வயது சிறுவன் செய்த செயல் – திகைத்த போலீஸ் (வீடியோ)

Tamil Viral Video: மேற்கு அமெரிக்காவின் உட்டாவில், சாலையில் வந்த காரை நிறுத்திய போலீஸ் அதிகாரிக்கு அதிர்ச்சியே மிஞ்சியது. குத்துமதிப்பாக ஒரு தினுசில் சாலையில் வந்து கொண்டிருந்த காரை, உட்டா நெடுஞ்சாலை அதிகாரி நிறுத்த, கார் அமைதியாக நின்றிருக்கிறது. யார் டிரைவர் என்று எட்டிப் பார்த்தால், ஸ்டியரிங் மட்டும்…

By: Updated: May 18, 2020, 07:44:41 PM

Tamil Viral Video: மேற்கு அமெரிக்காவின் உட்டாவில், சாலையில் வந்த காரை நிறுத்திய போலீஸ் அதிகாரிக்கு அதிர்ச்சியே மிஞ்சியது.

குத்துமதிப்பாக ஒரு தினுசில் சாலையில் வந்து கொண்டிருந்த காரை, உட்டா நெடுஞ்சாலை அதிகாரி நிறுத்த, கார் அமைதியாக நின்றிருக்கிறது. யார் டிரைவர் என்று எட்டிப் பார்த்தால், ஸ்டியரிங் மட்டும் தெரிகிறது.

‘எங்கயா மண்டைய காணோம்’ என்று அந்த அதிகாரி குழம்பிப் போக, அருகில் சென்று பார்த்தால், 5 வயது பொடியன் ஒருவன் அந்த காரை ஓட்டி வந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.


இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த அதிகாரி, சிறுவனிடம் விசாரணை நடத்த, அவன் சொன்ன செய்திதான் அவருக்கு மயக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

லாக்டவுனால நாய் கூட விரக்தி ஆவுது பாருங்க.. என்ன ஒரு சிந்தனை! (வீடியோ)

அந்த 5 வயது சிறுவன், ஆடம்பர சொகுசு லம்போர்கினி கார் வேண்டும் என்று கேட்டு பெற்றோரிடம் அடம் பிடித்திருக்கிறான். அவர்கள் மறுக்கவே, யாருக்கும் தெரியாமல், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை எடுத்துக் கொண்டு கலிபோர்னியா சென்று தானே கார் வாங்க முடிவு செய்து வண்டியை ஓட்டி வந்திருக்கிறான். அதுமட்டுமல்ல கார் வாங்க சார்வால் எடுத்து வந்த தொகை 3 டாலர்.

நல்வாய்ப்பாக, அவன் ஓட்டி வந்த காரால் அவனுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, மற்றவர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, காருக்கும் சிறு கீறல் கூட ஏற்படவில்லை. இது குறித்த வீடியோ சமூக தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


அடேய்… நானெல்லாம் அஞ்சு வயசுல பஞ்சு மிட்டாய் வாங்கி தின்னுக்கிட்டு இருந்தேண்டா!!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:5 yr old caught after stealing parents car to buy lamborghini viral video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X