New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/02/Kerala-woman-climbs-Agasthyaarkoodam-peak.jpg)
அட்வென்சர் சாகசங்களை செய்திட வயதானோர்களுக்கு, உடல் தகுதி மற்றும் வலிமையும் இருந்தாலும் கூட, பெரும்பாலும் தவிர்ப்பது வழக்கம். ஆனால், 62 வயதான நாகரத்னம்மா என்பவர், அதனை உடைத்தெறிந்து வயது வெறும் நம்பர் மட்டுமே என்பதை நிரூபித்து காட்டியுள்ளார். அவர் பிப்ரவரி 16 அன்று கேரளாவின் இரண்டாவது உயரமான சிகரமான திருவனந்தபுரத்தில் உள்ள அகஸ்தியர் மலையை ஏறி சாதித்துள்ளார்.
பெங்களூரை சேர்ந்த இவர், மலையேறும் காணொலி சமூக வலைதளத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. சேலை அணிந்துக்கொண்டு, சஹ்யாத்ரி மலைத்தொடரின் மிக உயரமான மற்றும் கடினமான சிகரங்களில் ஒன்றை நாகரத்னம்மா எளிதாக ஏறுவது பலரை ஆச்சரியமடைய செய்தது.
இன்ஸ்டாகிராமில் விஷ்ணு என்பவர், கர்நாடகாவிற்கு வெளியே நாகரத்னம்மாவின் முதல் பயணம் என்று கேப்ஷனில் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
அதில், திருமணத்திற்குப் பிறகு கடந்த 40 ஆண்டுகளாக குடும்பப் பொறுப்புகளில் பிஸியாக இருந்த நாகரத்னம்மா, தற்போது அவரது குழந்தைகள் வளர்ந்து செட்டிலாகிவிட்டதால், தனது கனவு பயணத்தை நோக்கி புறப்பட்டுள்ளார். அவரது உற்சாகத்தையும் ஆற்றலையும் யாராலும் ஈடுகட்ட முடியவில்லை. அவர் ஏறுவதைப் பார்த்த அனைவருக்கும் ஊக்கமளிக்கும் மற்றும் வளமான அனுபவமாக இருக்கும்" என குறிப்பிட்டிருந்தார்.
தற்போது, இந்த காணொலியை சமூக வலைதளத்தில் பார்க்கும் பலரும், லைக்களை அள்ளி வீசி வருகின்றனர்.
நாகரத்னம்மாவுக்கு முன், கேரளாவின் பாலக்காட்டில் உள்ள ஒரு பூங்காவில் 72 வயது மூதாட்டி பயமின்றி ஜிப் லைனிங் செய்வது நெட்டிசன்களை திகைக்க செய்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.