62 வயது யூடியூபர் பாட்டி… முதல் விமானப் பயணம்: நெட்டிசன்களை ஈர்க்கும் வைரல் வீடியோ
viral video: யூடியூப்பில் புகழ் பெறுவதற்கு முன்பு ஒரு பண்ணையில் வேலை செய்து வந்த 62 வயது மில்குரி கங்கவ்வா பாட்டி, 2020-ல் பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
viral video: யூடியூப்பில் புகழ் பெறுவதற்கு முன்பு ஒரு பண்ணையில் வேலை செய்து வந்த 62 வயது மில்குரி கங்கவ்வா பாட்டி, 2020-ல் பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
Advertisment
விவசாயத் தொழிலாளியாக வேலை செய்து வந்தவர், தனது தெலுங்கான பேச்சுவழக்கு மூலம் புகழ் பெற்ற யூடியூபராகவும், நகைச்சுவை நடிகையாகவும் மாறிய மில்குரி கங்கவ்வா, 62வது வயதில் தனது முதல் விமானப் பயணத்தை மேற்கொண்ட வீடியோ நெட்டிசன்களின் இதயங்களை வென்று வைரலாகி வருகிறது.
2020-ம் ஆண்டு தெலுங்கு ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கங்கவ்வா, பிப்ரவரி 24-ம் தேதி மேற்கொண்ட தனது முதல் விமானப் பயணத்தை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டார். வீடியோவில் அவர் போர்டிங் பாஸைப் பெறுகிறார். அவர் முதல் முறையாக விமானத்தில் பறக்கிறது. அவர் விமானத்திற்குள் நுழையும் போது பதற்றமாகிறார்.
உறுதியான தெலுங்கு பேச்சுவழக்கில் பேசிய கங்கவ்வா, டேக்-ஆஃப் செய்யும் போது தான் பயந்ததாகவும், சீட் பெல்ட்டை கழற்ற முயன்றதாகவும் கூறினார். விமானத்தின் உயரம் மற்றும் விமான சத்தம் தனது காதுகளை தாக்கியது என்றும் தான் எப்படி விமானத்தில் பயணித்தேன் என்பதை கங்கவ்வா பகிர்ந்து கொண்டார்.
கங்கவ்வா பாட்டியின் முதல் விமானப் பயண வீடியோ:
இந்த வீடியோ 6.3 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. நெட்டிசன்கள் மொழி தடையைப் பொருட்படுத்தாமல் வீடியோவை ரசித்து பார்த்து வருகிறார்கள்.
“அருமையான வேலை அண்ணா. உங்கள் மொழி எனக்குப் புரியவில்லை, ஆனால், நீங்கள் ஒரு சிறந்த வேலையைச் செய்துள்ளீர்கள், என் அம்மாவை விமானத்தில் அழைத்துச் செல்ல இந்த நாளுக்காக நான் காத்திருக்கிறேன்” என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்தார். “எனக்கு மொழி புரியவில்லை, மற்ற அனைத்தையும் புரிந்து கொண்டேன்” என்று மற்றொருவர் கூறினார். “சகோ எனக்கு தெலுங்கு புரியவில்லை, ஆனால், முதல்முறையாக விமானத்தில் ஏறும்போது ஏற்படும் உணர்வுகளை என்னால் உணர முடிகிறது” என்று மூன்றாமவர் பகிர்ந்து கொண்டார். “சில நேரங்களில் முழு கதையையும் சொல்ல வெளிப்பாடுகள் போதுமானதாக இருக்கும்” என்று மற்றொரு நெட்டிசன் பதிவிட்டுள்ளார்.
தெலுங்கானாவின் கிராமப்புற வாழ்க்கையையும் கலாச்சாரத்தையும் எடுத்துரைக்கும் யூடியூப் சேனல் ‘மை வில்லேஜ் ஷோ’வில் தோன்றிய பிறகு கங்கவ்வா பாட்டி புகழ் பெற்றார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"