Advertisment

சேற்றில் சிக்கிய 700 கிலோ எடை காண்டாமிருகக் குட்டி; தோள் மீது தூக்கிவந்து மீட்ட வனத்துறை: வைரல் வீடியோ

viral video: காட்டில் சேற்றில் சிக்கி காயமடைந்த 700 கிலோ எடைகொண்ட காண்டாமிருகக் குட்டியை வனத்துறையினர் தோள் மீது தூக்கி வந்து பாதுகாப்பாக மீட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
rhino rescue

சேற்றில் சிக்கி காயமடைந்த 700 கிலோ எடைகொண்ட காண்டாமிருகக் குட்டியை வனத்துறையினர் தோள் மீது தூக்கி வந்து பாதுகாப்பாக மீட்ட வீடியோ (x/ @ParveenKaswan)

viral video: காட்டில் சேற்றில் சிக்கி காயமடைந்த 700 கிலோ எடைகொண்ட காண்டாமிருகக் குட்டியை வனத்துறையினர் தோள் மீது தூக்கி வந்து பாதுகாப்பாக மீட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

வனத்துறையின் வேலை காடுகளைப் பாதுகாப்பது மட்டுமல்ல வனவிலங்குகளையும் பாதுகாப்பதும்தான். மனித இனம் வாழ்வதற்கு, நீர், நிலம், உணவு, அடிப்படை வசதிகள் எந்த அளவுக்கு அத்தியாவசியமானதோ அதே அளவுக்கு காடுகளும் இந்த உலகத்துக்கு அத்தியாவசியமானது. ஆனல், காடுகள் அழிப்பு என்பது தொடர்ந்து நடந்து வருகிறது. அதை தடுத்து நிறுத்தி காடுகளைப் பாதுகாப்பதும் வனவிலங்குகளைப் பாதுகாப்பதும் வனத்துறையின் முக்கிய வேலையாக இருக்கிறது.

காடுகளை விட்டு மனிதர்கள் குடியிருப்பு பகுதிக்கு வனவிலங்குகள் வரும்போது, மனிதர்கள் மற்றும் வனவிலங்குகள் இடையே மோதல் நடக்காமல் தடுக்க வனவிலங்குகளை மீண்டும் காடுகளில் விடும் பணியை வனத்துறையினர் மேற்கொள்கிறார்கள். அதே போல, காடுகளில் வனவிலங்குகள் ஏதேனும் நோய்வாய்ப் பட்டாலோ, அல்லது தாய் விலங்குகளிடம் இருந்து குட்டிகள் பிரிந்து தனியாக தவித்தாலோ அவற்றை மீட்டு பாதுகாக்கும் பணியிலும் வனத்துறையினர் ஈடுபடுகிறார்கள்.

அந்த வகையில், காட்டில், ஒரு சதுப்பு நிலப் பகுதியில் 700 கிலோ எடை கொண்ட ஒரு காண்டாமிருகக் குட்டி காயமடைந்து சேற்றில் சிக்கி திணறுவதைப் பார்த்த வனத்துறையினர், கம்புகளைக் ஸ்ட்ரெச்சர் போல கட்டி, அந்த காண்டாமிருகக் குட்டியை பாதுகாப்பாக மீட்டுள்ளனர். சேற்றில் சிக்கிய காண்டாமிருகக் குட்டியை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான், சேற்றில் சிக்கி காயமடைந்த காண்டாமிருகக் குட்டியை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்கும் வீடியோவை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

இந்த வீடியோ குறித்து ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் கூறியிருப்பதாவது: “சில சமயங்களில் பாதுகாப்பு இப்படித்தான் இருக்கும். 

இந்த 4 வயது பெண் காண்டாமிருக குட்டி சிறிது நேரம் சேற்றில் சிக்கி அசையாமல் இருந்தது. ஆகஸ்ட் 15-ம் தேதி நாங்கள் தலையிட வேண்டியிருந்தது. எங்கள் உணர்ச்சிமிக்க அணியால் மீட்கப்பட்டது. விலங்கு கனமாக இருந்ததால், அதைத் தூக்க பெரிய இயந்திரங்கள் மூலம் அணுக முடியாத பகுதி அது. சேறு மற்றும் காடு வழியாக தோள்களில் தூக்கிக் கொண்டுவரப்பட்டது. பின்னர் இயந்திரங்களுக்கு மாற்றப்பட்டது. சுமார் 13 நபர்களின் தோள்களில் 600-700 கிலோ எடையைத் தூக்கி வந்தனர். வளர்ந்த பெரிய காண்டாமிருகம் என்றால் 2000 கிலோ வரை போகும். 

அந்த விலங்கு இன்னும் கால்நடை நிபுணர் அதிகாரியின் பராமரிப்பில் உள்ளது. சிகிச்சையில் உள்ளது.” என்று பர்வீன் கஸ்வான் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் தன்னுடைய மற்றொரு பதிவில், “காயமடைந்த மற்றும் தாக்கப்பட்ட 700 கிலோ காண்டாமிருகக் குட்டியை மீட்க தேவையான ஒரு உணர்ச்சிமிக்க அணி எங்களிடம் உள்ளது. காண்டாமிருகம் இடமாற்றம் செய்யப்பட்டு தற்போது கால்நடை அதிகாரியின் சிகிச்சை மற்றும் பராமரிப்பில் உள்ளது.” என்று பர்வீன் கஸ்வான் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், சேற்றில் சிக்கிய 700 கிலோ எடை கொண்ட காண்டாமிருகக் குட்டியை வனத்துறையினர் தோளில் தூக்கி வந்து போராடி மீட்டதற்கு பாராட்டுதல்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment