71 வயது பேராசிரியரின் வேடிக்கையான அறிவியல் சோதனை செய்முறை விளக்கம்; வைரல் வீடியோ

அமெரிக்காவில் 71 வயதான இயற்பியல் பேராசிரியர் ஒருவர் மாணவர்களைக் கவரும் விதமாக இயற்பியல் அறிவியல் சோதனைகளை வேடிக்கையாக செய்துகாட்டி பாடம் நடத்திய வீடியோ சமூக ஊடகங்களில் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

By: Updated: December 14, 2019, 09:00:10 PM

அமெரிக்காவில் 71 வயதான இயற்பியல் பேராசிரியர் ஒருவர் மாணவர்களைக் கவரும் விதமாக இயற்பியல் அறிவியல் சோதனைகளை வேடிக்கையாக செய்துகாட்டி பாடம் நடத்திய வீடியோ சமூக ஊடகங்களில் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

ஜெயலலிதாவின் கதையாக எடுக்கப்பட்ட இணையதள தொடருக்கு தடை கோரிக்கை..

அமெரிக்காவின் வெர்ஜினியாவில் உள்ள டைட்வாட்டர் கம்யூனிட்டி கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பணிபுரிகிறார் 71 வயதான டேவிட் ரைட். இவர் தனது வகுப்பறையில் மாணவர்கள் பாடத்தில் முழு கவனத்துடன் வைத்திருப்பதற்காக புதுவிதமான முறையில் இயற்பியல் செய்முறை விளக்கங்களை செய்துகாட்டி மாணவர்களைக் கவர்ந்துள்ளார்.

பேராசிரியர் டேவிட் ரைட் இந்த செமஸ்டரில் மாணவர்களுக்கு இயற்பியல் பாடம் நடத்தியபோது அவர் மாணவர்களுக்கு செய்து காட்டிய எளிமையான வேடிக்கையான செய்முறை விளக்கங்களை அவருடைய மாணவி எரிக்கா என்பவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


இந்த வீடியோவைப் பார்த்த பலரும் இப்படி ஒரு ஆசிரியர் தனக்கும் வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததோடு பேராசிரியர் டேவிட் ரைட்டுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதனால், சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் இந்த வீடியோ வைரல் ஆகி உள்ளது.


அந்த வீடியோவில் பேராசிரியர் டேவிட் ரைட், தனது வகுப்பறையில் மாணவர்களுக்கு பல இயற்பியல் ஆய்வக பரிசோதனை செய்முறைகளை செய்துகாட்டி விளக்குகிறார். அதன் எளிமையையும் வேடிக்கைத் தன்மையையும் கண்டு மாணவர்கள் உற்சாகமடைகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:71 years old physics professor science fun demonstrations in class viral video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X