72 வயதில் துபாயில் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஓட்டி அசத்திய கேரளப் பெண்: 11 வாகனங்களுக்கு லைசென்ஸ் பெற்று சாதனை

மணி அம்மா, கார்கள், லாரிகள் முதல் ஃபோர்க்லிஃப்ட் மற்றும் கிரேன்கள் வரை 11 வகையான வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றுள்ளார்.

மணி அம்மா, கார்கள், லாரிகள் முதல் ஃபோர்க்லிஃப்ட் மற்றும் கிரேன்கள் வரை 11 வகையான வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றுள்ளார்.

author-image
WebDesk
New Update
Mani Amma Kerala woman Dubai driving

துபாயின் போக்குவரத்தில் ஆடம்பரமான ரோல்ஸ் ராய்ஸை நம்பமுடியாத நம்பிக்கையுடனும் எளிமையுடனும் ஓட்டுவதற்கு முன், மணி அம்மா தனது சர்வதேச ஓட்டுநர் உரிமத்தைக் காட்டுவதைக் காணலாம். Photograph: (Image source: @maniamma_official/Instagram)

கேரளாவைச் சேர்ந்த 72 வயதான மணி அம்மா, துபாயில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை ஓட்டிச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாரம்பரிய புடவையில், மிகவும் அமைதியாகவும் நம்பிக்கையுடனும் அவர் கார் ஓட்டும் விதம் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

ஆங்கிலத்தில் படிக்க:

Advertisment

‘தி டிரைவர் அம்மா’ என்று அன்புடன் அழைக்கப்படும் மணி அம்மா, கார், லாரி முதல் ஃபோர்க்லிஃப்ட், கிரேன்கள் வரை 11 விதமான வாகனங்களை ஓட்டுவதற்கான உரிமங்களை வைத்துள்ளார். கேரளாவில் சொந்தமாக ஒரு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியையும் நடத்தி வரும் இவர், ஆர்வமுள்ளவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவில், மணி அம்மா தனது சர்வதேச ஓட்டுநர் உரிமம் அனுமதிச் சீட்டை (International Driving Permit) காட்டிய பிறகு, ஆடம்பரமான ரோல்ஸ் ராய்ஸ் காரை மிகவும் எளிதாகவும் நம்பிக்கையுடனும் துபாயின் போக்குவரத்து நெரிசலில் ஓட்டிச் செல்வது பதிவாகியுள்ளது.

இந்த வீடியோவை அவரது அதிகாரபூர்வ பக்கத்தில் வெளியிட்டபோது, "சர்வதேச ஓட்டுநர் அனுமதிச் சீட்டு (ஐ.டி.பி - IDP) என்பது பல வெளிநாடுகளில் வாகனம் ஓட்டுவதற்குத் தேவையான ஒரு சட்டபூர்வமான ஆவணம். இது உங்கள் வசதி மற்றும் பாதுகாப்பிற்காக ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பயண ஆவணம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Advertisment
Advertisements

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வயதிலும் அவர் கார் ஓட்டுவதைக் கண்டு பலரும் வியந்துள்ளனர். ஒருவர், "உலகில் அனைத்து வகை வாகனங்களையும் இயக்கக்கூடிய சர்வதேச உரிமம் வைத்துள்ள வயதான பெண் இவராகத்தான் இருப்பார்" என்று கூறியுள்ளார். மற்றொருவர், "உண்மையான பவர் ஹவுஸ் இவர்தான்" என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

"அம்மா தனது கனவு வாழ்க்கையை வாழ்கிறார்" என்றும் ஒரு பயனர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு, தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது #மண்டே மோட்டிவேஷன் தொடரில் மணி அம்மாவைப் பாராட்டியிருந்தார். அவரது துணிச்சலைப் பாராட்டி, "வாழ்க்கை மீது இவருக்கு தீராத ஆர்வம் உள்ளது. கூடுமானவரை பல சாதனைகளை விட்டுச் செல்ல வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருக்கிறது. இவருக்கு வயது என்பது வெறும் எண்ணே" என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்த ஒரு பயனர், "வயது என்பது வெறும் எண், ஆர்வமும் விருப்பமும்தான் எல்லாம்" என்று எழுதினார். மற்றொருவர், "இந்த மன உறுதி எனக்குப் பிடித்துள்ளது! சிலர் வயதை தங்கள் எல்லைகளாகக் கருதுவதில்லை. புதிய சாகசங்களை அனுபவிக்க தொடர்ந்து தங்களைத் தாங்களே ஊக்குவித்து வருகின்றனர். வாழ்க்கை என்பது நீங்கள் மெதுவாகச் சென்றால் மட்டுமே மெதுவாகும் என்பதற்கு இது ஒரு சரியான நினைவூட்டல்" என்று பதிவிட்டுள்ளார்.

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: