சென்னைப் பல்கலைக்கழக 166-வது பட்டமளிப்பு விழாவில், கன்னியாகுமரியைச் சேர்ந்த 78 வயது முதியவர் தங்கமணி முனைவர் பட்டம் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். கல்வி கற்பதற்கு, ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெறுவதற்கும் வயது தடையில்லை என்று சாதித்துக் காட்டியிருக்கும் அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் 166-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என். ரவி தலைமையில் சென்னை பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) நடைபெற்றது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஓமி பாபா நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தரும், முன்னாள் இந்திய அணுசக்தி துறை தலைவருமான அணில் கக்கோட்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
சென்னைப் பல்கலைக்கழக 166-வது பட்டமளிப்பு விழாவில் 1 லட்சத்து 7ஆயிரத்து 821 நபர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில், ஆளுநர் ஆ.என். ரவி 1031 மாணவர்களுக்கு பட்டங்களை நேரடியாக வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவில்தான், கன்னியாகுமரியைச் சேர்ந்த 78 வயது முதியவர் தங்கமணி இலக்கியத் துறையில் முனைவர் பட்டம் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
தங்கமணி 78 வயதில் இலக்கியத் துறையில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றிருப்பது, கல்வி கற்பதற்கும், முனைவர் பட்டம் பெறுவதற்கும் வயது தடையில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது. 78 வயதி முனைவர் பட்டம் பெற்றுள்ள தங்கமணிக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளைச் சார்ந்த மாணவ மாணவியர் 89 ஆயிரத்து 53 பேருக்கும், தொலைதூர கல்வி நிலையத்தில் பயின்ற 16,263 பேருக்கும், பல்கலைக்கழக துறைசார்ந்த 1,404 பேருக்கும், முனைவர் பட்டம் 70 பேருக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“