78 வயது முதியவர் 18 வயது இளம்பெண்ணை திருமணம் செய்துள்ள நிகழ்வு பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இது காதல் திருமணம் என்ற தகவல் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸில் ஓய்வு பெற்ற விவசாயி ரஷெட் மங்காகோப். இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ககாயன் மாகாணத்தில் ஒரு இரவு விருந்தில் ஹலிமா அப்துல்லா என்ற 15 வயது இளம் பெண்ணை சந்தித்துள்ளார். அன்றிலிருந்து இருவரும் காதலித்து வந்த நிலையில், இந்த காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது.
மேலும் இது நிச்சயிக்கப்பட்ட திருமணம் அல்ல, இந்த ஜோடி "முழுக்க முழுக்க காதலால் ஒன்று சேர்ந்துள்ளனர் என்று ராஷேட்டின் மருமகன் பென் மங்காகோப் கூறியுள்ளார். மேலும் இதற்கு முன் திருமணம் செய்து கொள்ளாத ராஷெட் யாரையும் கதலிக்கவும் இல்லை என்பதால் ஹலிமா அவருடன் தனது முதல் ரிலேஷன்ஷிப்பை கொண்டுள்ளார்.
3 ஆண்டுகள் மகிழ்ச்சியாக காதலித்து வந்த இவர்கள் கடந்த ஆகஸ்ட் 25 அன்று இஸ்லாமிய விழாவில் திருமணம் செய்து கொண்டனர். "மணமகன் எனது தந்தையின் சகோதரர். மணமகளின் தந்தை என் மாமாவிடம் வேலை செய்வதால் அவர்கள் ஒரு கூட்டத்தின் போது சந்தித்தனர்" என்று பென் கூறியதாக மிரர் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
60 வயது வித்தியாசம் உள்ள இந்த அசாதாரண உறவுக்கு இரு குடும்பத்தினரிடமிருந்தும் சம்மதம் பெற்றுள்ளனர். மேலும் என் மாமா வயதானவர், அவர் தனிமையில் இருந்ததால், குடும்பத்தினர் அனைவரும் தங்கள் ஆசீர்வாதங்களை வழங்கி இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். ஹலிமா அவரது முதல் மனைவி. அவர்கள் மிகவும் இனிமையாக இருக்கிறார்கள் என்று பென் கூறியுள்ளார்.
பிலிப்பைன்ஸின் சட்டங்களின்படி, 21 வயதுக்கு குறைவான ஒருவர் திருமணம் செய்து கொள்ளலாம் என்றாலும் பெற்றோரின் சம்மதத்தைப் பெற வேண்டும் என்ற விதி உள்ளது. அந்த வகையில் பெற்றோர் சம்மதத்துடன் நடந்த இந்த திருமணம் பிலிப்பைன்ஸ் விதிப்படி செல்லுபடியாகும்.
திருமணம் முடித்த தம்பதி தற்போது கார்மென் நகரில் உள்ள புதிய வீட்டில் தம்பதியர் வசித்து வருகின்றனர். கூடிய விரைவில் குடும்பம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“