New Update
/indian-express-tamil/media/media_files/2024/12/06/3XDjdlXg3h8X1xmenehi.jpg)
மலேசியாவில் ஒரு வீட்டுக்குள் கூரையைப் பிச்சிக்கொண்டு விழுந்த மலைப்பாம்பு
கொடுக்குற தெய்வம் கூரையைப் பிச்சிக்கிட்டு கொடுக்கும் என்று ஒரு சொலவடையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். வீட்டுக் கூரையைப் பிச்சிக்கிட்டு மலைப் பாம்பு விழுந்ததைப் பார்த்திருக்கிறீர்களா? இந்த வைரல் வீடியோவைப் பாருங்கள்.
மலேசியாவில் ஒரு வீட்டுக்குள் கூரையைப் பிச்சிக்கொண்டு விழுந்த மலைப்பாம்பு
மலேசியாவில் ஒரு வீட்டுக்குள் கூரையைப் பிச்சிக்கிட்டு மலைப் பாம்பு விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த மலைப்பாம்பு பிடிக்கப்பட்டு வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறைக்கு (பெர்ஹிலிடன்) உரிய பராமரிப்புக்காக அனுப்பப்பட்டது.
ஆங்கிலத்தில் படிக்க: 80 kilo-python crashes through Malaysian home’s ceiling: ‘It’s python’s house now’
கொடுக்குற தெய்வம் கூரையைப் பிச்சிக்கிட்டு கொடுக்கும் என்று ஒரு சொலவடையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதாவது, நமக்கு செல்வத்தைக் கொடுக்க இறைவன் நினைத்தால் ஏதாவது ஒருவகையில், எப்படியாவது கொடுப்பார் என்பதுதான் பொருள். ஆனால், கூரையைப் பிச்சிக்கிட்டு வீட்டுக்குள் ராட்சத மலைப் பாம்பு விழுந்தால் என்ன செய்வீர்கள்? ஆம், மலேசியாவில் ஒரு வீட்டுக்குள் கூரையைப் பிச்சிக்கிட்டு மலைப் பாம்பு விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மலேசியாவின் காமுண்ட்டிங் நகரில் உள்ள கம்பங் டியூ-வில் ஒரு வீட்டில் தீடீரென கூரையைப் பிச்சிக்கொண்டு 5 மீட்டர் நீளம் கொண்ட 80 கிலோ மலைப்பாம்பு சோபா மீது விழுந்து நகரத்தொடங்கியது. அப்போது அந்த வீட்டில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் சில நொடிகள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.
இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள மலேசிய செய்தி வெளியீட்டான நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், பாம்பு அருகிலுள்ள எண்ணெய் பனை தோட்டத்தில் இருந்து வந்ததாக நம்பப்படுகிறது. இந்த மலைப் பாம்பின் திடீர் பீதியடைந்த குடும்பத்தினர், மலேசியாவின் சிவில் பாதுகாப்பு நிறுவனமான அங்கதன் பெர்தஹானன் அவாமின் (ஏ.பி.எம்) ஒரு பகுதியான தைப்பிங் மாவட்ட குடிமைத் தற்காப்புப் படையை நவம்பர் 22-ம் இரவு 8 மணியளவில் தொடர்புகொண்டனர். ஏழு அதிகாரிகள் அவசரநிலைக்கு நடவடிக்கை எடுத்தனர்” என்று மாவட்ட ஏ.பி.எம் அடிகாரி ஃபைசுல்ஹலிமி முகமது யூனுஸ் தெரிவித்தார்.
மலைப் பாம்பைப் பிடிக்க அந்த இடத்துக்கு விரைந்து சென்ற குழுவினர், பாம்பைப் பிடிப்பதற்கு அந்த வீட்டு அறையின் கூரையின் ஒரு பகுதியை இடிக்க வேண்டியிருந்தது. இன்ஸ்டாகிராமில் ப்ரூட் அமெரிக்காவால் பகிரப்பட்ட ஒரு வீடியோ பின்விளைவுகளைக் காட்டுகிறது - கூரையில் ஒரு இடைவெளி மற்றும் சோபாவின் குறுக்கே பெரிய மலைப்பாம்பு நகர்கிறது - இந்த காட்சி பார்வையாளர்களைத் திகைக்க வைத்தது.
வீடியோவைப் பாருங்கள்:
மலைப் பாம்பு பிடிக்கப்பட்டு பின்னர், அந்த மலைப்பாம்பு உரிய பராமரிப்புக்காக வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா துறைக்கு அனுப்பப்பட்டது.
இந்த வீடியோ ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலாக பரவியது. இந்த வீடியோவுக்கு கருத்து தெரிவித்த ஒரு பயனர், “இது இப்போது மலைப்பாம்பு வீடு. அதற்காக நான் மல்யுத்தம் செய்யவில்லை. நான் மீண்டும் தொடங்குகிறேன். நன்றி.” மற்றொரு பயனர் எழுதினார், "இது ஆஸ்திரேலியா இல்லையா." என்று கேட்டுள்ளார்.
மூன்றாவது பயனர், பாம்பை அடிப்பதற்கு “குச்சி பயனற்றது என்று நான் நினைக்கிறேன்” நான்காவது பயனர் எழுதினார், "யாராவது 20 அடி மலைப்பாம்பைக் கண்டுபிடிக்கும் ஆள் இருந்தால் டேக் பண்ணுங்கள்." என்று ஜாலியாகக் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.