New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/12/santa_1200_twt.jpg)
ஐபாட் கேட்டது கூட பரவாயில்ல... அந்த பாம்பு எதுக்கு தான்னு இன்னும் புரியல ஃப்ரெண்ட்ஸ்... ஒரு வேளை உங்களுக்கு தெரிஞ்சா எங்களுக்கு கமெண்ட்டில் பதில் கூறுங்கள்.
ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் திருநாள் டிசம்பர் மாதம் 25ம் தேதி கொண்டாடப்படும். தாங்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் விருப்பங்களை நிறைவேற்றும்படி சாண்டாவிடம் வேண்டுவது வழக்கம். ஒரு 9 வயது சிறுமி தனக்கு தேவையான விருப்பம் என்று ஒன்றை லிஸ்ட்டாக வெளியிட்டுள்ளார். அதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவருடைய சகோதரி, சாண்டாவிடம் என் தங்கை கேட்டதை பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
Y’all, look at this letter my little 9y/r sister wrote to Santa????????. pic.twitter.com/yjSQpURjli
— Desi die Mula (@AllyTheJedi) December 15, 2020
இந்த ஆண்டில் நான் ஒன்றும் அவ்வளவு நல்லாக இல்லை என்பதை ஒப்புக்கொண்ட அந்த குழந்தை, கிறிஸ்துமஸ் ஃபாதருக்கு, நீங்கள் மிகவும் சிறப்பான வருடத்தை பெற்றிருப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் நீங்கள் நலமுடன் இருக்கின்றீர்கள் என்றும் நம்புகின்றேன். ஆனால் என்னுடைய வருடம் அதற்கு முற்றிலும் மாறாக இருந்தது என்று கூறிய அவர் இந்த ஆண்டு தனக்கு தேவையான பரிசுகள் என்று கூறி ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில் ஏர்பாட்ஸ், பாம்பு, டி.ஜே.செட், ஐபோன் 12, மொபைல் லேப்டாப், புதிய கம்யூட்டர், மற்றும் ஹேண்ட் சேனிடைஸர் என்று எல்லாம் கேட்டிருக்கிறார்.
மேலும் படிக்க : ஒருவரின் மகிழ்ச்சிக்கு காரணமாய் இருப்பது எவ்வளவு ஆனந்தம் தெரியுமா?
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.