New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/04/robber_759_twt.jpg)
A man climbed from 23rd floor
ஆனால் 23-வது மாடியில் இருந்த அந்த வீட்டின் உயரம் அவனது திட்டத்தை அழித்திருக்கிறது.
A man climbed from 23rd floor
சீனாவில் காவல்துறையிடமிருந்து தப்பிப்பதற்காக, 23 மாடியின் ஜன்னலில் இருந்து குதிக்க முயன்றிருக்கிறான் கொள்ளைகாரன் ஒருவன்.
ஆனால் அவன் அத்தனை சிரமப்பட்டது பிரயோஜனப்படாமல், இறுதியில் போலீஸிடமே சிக்கி விட்டான்.
மார்ச் 24-ம் தேதி ஷங்காய் நகரில் நடந்த ஒரு கொள்ளை சம்பவத்தில் அவன் தொடர்புடையவன் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு கடை முதலாளியின் ஏ.டி.எம் கார்டு மற்றும் 10000 யுவான் பணத்தையும் அவன் கொள்ளையடித்திருப்பதாக ஒரு செய்தித்தளம் தெரிவிக்கிறது.
அவனது வீட்டிற்கு சென்று போலீசார் விசாரிக்கும் போது, அங்கிருந்து அந்த கொள்ளையன் தப்பிக்க முயன்றிருக்கிறான். ஆனால் 23-வது மாடியில் இருந்த அந்த வீட்டின் உயரம் அவனது திட்டத்தை அழித்திருக்கிறது.
இந்நிலையில் வீட்டிலிருந்து அந்த கொள்ளைகாரன் தப்பிக்க முயலும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.